பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 
அந்தி நிலாச் சதுரங்கம்

2. கண்ணீர் நிவேதனம்


ஒமேகா பூஞ்சிட்டுக்குப் பொய் பேசத் தெரியாது. காலத்தைப் பேச வைக்கத்தான் தெரியும். மணி ஒன்பது ஆகிவிட்டதாம்!

கவர்க் கடிகாரம் நேரத்தை அறிவித்ததோ இல்லையோ, ரஞ்சித்தின் ஒரு சாண் வயிறு, தமது பசியான பசியை இரண்டு சாண் நீளத்துக்குச் சாங்கோபாங்கமாக அறிவித்தது.

தன் உயிருக்கு ஒரு மங்கலச் சின்னமாகத் திகழும் ஆருயிர் அத்தானை முழுமனத்தோடு நம்புகின்ற மிஸஸ் ரஞ்சித், அவர் நாகேஷ் பாணியில் வெளிப்படுத்திய பசியின் தத்ரூபமான உணர்ச்சிக் குறியீடுகளை மாத்திரம் நம்பாமல் இருப்பாளா என்ன? அன்புத் துணைவரின்மெளனக் கூத்தைக் கண்டதும், அவளுக்கு வாயெல்லாம் பல்; முழுசான முப்பத்திமூன்று பல் சிரிப்பு: அதாகப்பட்டது. தெற்றுப்

23