பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடத்தி வைத்துவிட்டுச் சிரித்துத் தீர்த்த அந்தப் பயங்கர நிகழ்ச்சி அவரையும் திமிறிக்கொண்டு அவரது நெஞ்சில் ஊடுருவிப் புகுந்து, நச்சு வண்டாகத் துளைத்தது: ஐயையோ!-கடுப்பு தாங்கவில்லை!-‘ரஞ்...!’, நேத்திரங்களிலும் ரத்தம் கரைகிறது.

ரஞ்சித் அடைந்த பதற்றத்திற்கு லவலேசமும் குறைவுபடாமல் கேட்டாள் ரஞ்சனி- “அழறீங்களா, அ...த்...தான் .”

“ஆமா!” ஒப்புக்கொண்டார் ரஞ்சித்.

“நிஜமாகவேதான் அழறீங்களா?”

“பிறகு, பொய்யாகவா அழுவேன்?”

“நீங்க ஏன் அழவேணும்?”

“அதை என்னைக் கேட்டால்.. ?”

“பின்னே, யாரைக் கேட்கணும் நான்?”

“உன்னையே நீ கேட்டுக்க!”

“என்னையே நான் கேட்டுக்கிடவா?”

“ஆமா!”

“ஆமாவா?”

“ஊம்!”

“........”

“புரியலையா இன்னம்?”

“புரியும்படியாவோ, இல்லே, புஞ்சுக்கும்படியாவோ சொன்னால்தானுங்களே புரியும்?”

“அப்படியா?”

27