பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலிப்பொட்டில் ‘நிவேதனம்’ ஆகிக்கொண்டிருக்கின்றன!

டக்-டிக்-டக் ...!

“அழாதே, ரஞ், அழாதே! நீ அழுதால், நான் செத்துப் போயிடுவேன்!”

சுடர் விளக்கானாள் ரஞ்சனி. “ஐயைய்யோ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க, அத்தான்!” மனம் பதற, கைகளும் பதற, மங்கலத் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களிலே ஒற்றிக்கொண்டாள். “என்னோட அன்புத் தெய்வமே அநியாயமாய்ச் செத்துப்போயிட்டா, அப்புறம் நான் எந்தக் கோயிலிலே போய் விழுந்தழுவேன்?” தாய் முலைப் பாலுக்காக ஏங்கித் தவித்து, ‘அரைமூடி’ப் பாப்பா வீரிடுமே, அந்தப் பாங்கிலே வீரிட்டாள் ரஞ்சனி. “உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டுங்க, அசந்து மறந்துங் கூட, செத்துப் போயிடாதீங்க, அத்தான்! நீங்க உயிரும் உடம்புமாய் இருந்தால்தானுங்களே, நீங்கள் பாசத்தோட கட்டிக் காத்துப் பரிவோட காபந்து பண்ணி வச்சுக்கிட்டு இருக்கிற இந்தப் பாவியோட உயிருக்குத் தாலிப்பாக்கியம் கிட்டமுடியும்? அத்தான்...அத்தான்!” கையெடுத்துக் கும்பிட்டாள் ரஞ்சனி.

பொற்கரங்களைக் கண்களில் ஒற்றிக்கொண்டார் ரஞ்சித். விம்மல் வெடிக்க, நெஞ்சும் வெடித்துவிடும் போலிருந்தது.

“அழாதீங்க, அத்தான், அழாதீங்க; நீங்க அழுதால் எந்தத் தெய்வத்துக்குமே பொறுக்காதுங்க!” கெஞ்சினாள் ரஞ்சனி. அன்புக் கண்ணீரைச் செருமிக்கொண்டே துடைத்துவிட்டாள்.

திடீரென்று மாடியில் நிசப்தம்.

மனைவியின் கண்ணீரை அவசரம் அவசரமாகத் துடைத்துவிட்ட பாங்கர், “ரஞ்சனி, நம்ப ஸி. ஐ. டி.

36