பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டைம் ஆச்சு" என்றாள் நந்தினி விலாசத்தின் செல்லச் குமாரி, செல்வக்குமரி . பின்னே, நீ இறங்கி வர வேண்டியதுதானே?’’ என்று குறுக்கிட்டார் தந்தை.

"நீங்களோ, அம்மாவோ இரங்கிக் கூப்பிட்டால் என்னவாம்?”

ரஞ்சித்திற்குச் சிரிப்புப் பீறிட்டது.

“ஏங்க! நம்ப ராசாத்திக் குட்டிக்கு 'றகர'- 'ரகர’ வித்தியாசம் இப்ப நல்லாத் தெரிஞ்சு போச்சுங்க!”

"இரங்கி என்கிறதை நைஸாகவும், லாகவமாகவும் நந்தினி சொன்னப்பவே, நான் கவனிச்சிட்டேன். நம்ப மனசிலே பால் வார்த்திருச்சு நம்ம பொண்ணு. ஆமா, ரஞ்...!"

பெற்றவள் சேலை முந்தானையைக் கொய்து வாயில் அமுக்கிக் கொண்டாள்.

எத்தனை நாழிகைதான் அசடு வழியாமல் இருக்கும்? “நான் ஒண்னும் உங்க மனசிலே பால் வார்க்கலே: நிஜமாகவே பாலே வார்த்தது உங்க பாபுவாகத் தான் இருப்பான்! ஏன்ன, அவன் அதிசயப் பிள்ளையாச்சே? அதிசயமான பிள்ளையும் ஆச்சுதே' என்று பொரிந்து தள்ளினாள் குமரிப்பெண்.

மின்னாமல் முழங்காமல் இடிச் சத்தம் கேட்டால், யாருக்கும் திகைப்பாகவே இருக்கும்.

பெற்றவர்கள் திடுக்கிட்டனர்.

ரஞ்சித் தவிப்பை மறைத்தவராக, ‘நந்தினித் தங்கமே! நம்ப பாபு அதிசயப் பிள்ளைதான்; அதிசயமான பிள்ளையுந்தான். அதிலே சந்தேகமே இல்லை!-அது மாதிரியே.

39