பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீயும் அதிசயப் பெண்தான்: அதிசயமான பெண்ணும் தான்!” என்று நறுக்குத் தறித்தாற் போன்று விடை கூறினார் ரஞ்சனியின் கணவர்.

ரஞ்சித்தின் மனைவியும் ஊம் போட தவறிவிடவில்லை.

தொட்டால் சிணுங்கிப் பெண் மறுபேச்சுப் பேசவில்லை. சிறை வைத்திருந்த மென்சிரிப்பிற்கு விடுதலை தர இப்போதாவது நந்திணிக்கு மனம் இறங்கியும், இரங்கியும் வந்ததே?

தாய்க்கும் தந்தைக்கும் இப்பொழுதுதான் நல்ல மூச்சு வெளிவாங்கியது போலும்!

"பசியெடுத்து ரொம்ப டைம் ஆச்சுதின்னு தம்ப பொண்ணு சொன்னிச்சில்லே?”

"பசி போயும் ரொம்ப டைம் ஆச்சின்னு உங்க பொண்னேதான் சொல்லுது!" என்று கோபாவேசத்தோடு குறுக்கிட்டாள் நந்தினி.

“அப்படி யெல்லாம் நீ கோபிச்சுக்கிட்டா, அப்புறம் தாங்க என்ன ஆகிறதாம்:

“ஆமாடி, ராசாத்தி!"

‘தரிசனத்தைப் பாரு தரிசனத்தை! நீங்க ஒண்ணும் ஆகமாட்டீங்க: என்னோட டாடியாவும் மம்மியாவும்தான் இருப்பீங்க!’

‘சரி, சரி. வார்த்தையாடாம, இட்டிலியை எடுத்துவை. ரஞ்சனி. ஒரு சங்கதியைக் காரசாரமாவே சொல்லிட்றேன். இங்கிட்டு நம்ப நந்தினிப் பெண் எழுந்தருளிடுச்சின்னா, நீ ஒட்டமா ஓடிப் போய்ப் பின்கட்டுக் கதவைத் திறந்து வச்சுக்கிட்டு, நம்ப முருங்கை மரத்தையும் ஒரு பார்வை

40