பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்த்துக்கிட்டிருக்கிறது நல்லது. சரி, சரி, நீ போய் உன்னோட எதாஸ்தானமான ஊதாநிறக் குஷன் சோடாவிலே உட்காரம்மா!’

“நான் வேதாளம் ஒன்னும் கிடையாது. அப்பா ஆர்டர்ப்படி, என்னோட ஊதா நீலச் சோபாவிலேயே தான் உட்காரப் போறேன். அப்பாவுக்குத்தான் ஊதா நிறம்னா, ரொம்பப் பிடிக்குமே?”

மறுபடி, ஒரு “சுருக்! பூஜைக்குப் புறப்படுவதற்கு முன் சுவைத்துக்கொண்டிருந்த ஊதாநிற அந்தரங்கடயசியையும் ஒண்டியிருந்து பார்த்திருப்பாளோ நந்தினி?-அதைப்பத்திரப் படுத்தியதை ஒரு முறைக்கு இரு முறையாக ஞாபகப் படுத்தி ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட பின்னர்தான், அவருக்குத் தவிப்பு நீங்கியிருக்கலாம். அப்புதமா நாம வாயாடலாம். முதலிலே நீ சாப்பிடேன்’ என்றார் ரஞ்சித். ‘அந்தக் காலத்திலே நான் சின்னவனா நம்: பாபு மாதிரி இருந்த நாளையிலே, குந்திச் சாப்பிடுறதுக்கு எனக்கு வெறும் மன் தரைதான் கிடைச்சுது: என் தாய் தகப்பளுலே முடிஞ்சது அவ்வளவு தான் என்னமோ, விதி. திசையைத் திருப்பின தாலே, சீதேவியான உன் அம்மாக்காரி எனக்குக் கிடைச்சாள்: சீதேவியான மஹாலஷ்மியும் எங்களைத் தேடிவந்தா: ஜாம் ஜாம்னு உட்காருறதுக்கு பட்டு மெத்தை போட்ட சோபா கிடைச்சிருக்கையிலே, நீ ஏன் முருங்கை மரத்திலே ஏறிக்கிடுற வேதாளமாய் உன்னைப் பாவிச்சுத் கிடனும்? விழுந்திடப் போறே நல்லா உட்கார்த்துக்க, மகளே! பேச்சை நிறுத்தினார், குடும்பத்தின் தலைப்புள்ளி.

அப்பாவின் விநயபூர்வமான இயகான பேச்சை ஏற்றுக் கொள்ளத் தவற வில்லை நந்தினி. மிக லேசாய் நாணப்பூ மொட்டவிழ்ந்தது. நாணம் மணக்காமல் இருந்து விட இயலுமா?-ஆகவே தான், அவள் கம்பீரமான க்வீன் மேரிஸ் மாணவியாகச் சாய்மான இருக்கையில் கால்மேல் கால் போட்டுச் சாய்ந்து கொண்டிருக்கிறாள். போட்டுக்

41