பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்டிய புள்ளிப்படி அன்னை நீட்டிய வெள்ளி இட்டிலிப் பிளேட்டை அதாவது, இட்டிலி நிரம்பிய வெள்ளிப் பிளேட்டைப் பத்திரமாக ஏந்திக்கொண்டு நர்ஸ்ரி சிறுமி மாதிரி ‘ஒன், டு, த்ரீ’ போட்டு எண்ணி முடித்ததும் தான், தக்காளிச் சட்டினி கண்ணிலே பட்டது முகத்தைச் சுளித்துக் கொண்டாள். உறைப்பு தூக்கலான பச்சைக் கொத்தமல்லித் துகையல் என்றால் தான் அவளுக்கு நாக்கில் நீர் சொட்டும். ஆனால், அம்மாவுக்கும் பாபு பையனுக்கும் பிடிக்கக்கூடிய மிளகாய்ப் பொடி, அப்பாவுக்குப் பிடிக்காதது போலவே, இவளுக்கும் பிடிக்காது. துகையல் கிடைக்காத ஏமாற்றத்தை அவளால் ஒதுக்கி விட முடியவில்லை. நாற்காலியில் வீற்றிருந்த தந்தையை ஒட்டி உரசிக் கொண்டு, ஒற்றைக் கால் தவம் இயற்றிய பார்வதிதேவியாக நின்றிருந்த தாயின் பக்கம் திரும்பினாள்.“ டிஃபன் நேரத்திலே உங்களிலே யாருமே என்னைக் கூப்பிடவேணும்னு நினைக்கல்லே; அது உங்க சொந்த விருப்பு வெறுப்புசம்பந்தமான சொந்த விஷயம். பாப் ம்யூஸிக்னா எனக்குப் பசிக்கக் கூட பசிக்காது போலிருக்கேன்னு கம்மா ஒரு பேச்சுக்கு எப்போதோ திருவாளர் மகேஷ் சொன்னது ஒண்ணும் வேதவாக்கா ஆகிட முடியாது. அது போகட்டும். இன்னொரு விஷயம்!-என்னை யாருமே அத்தனை சுலபமாய் அவாய்ட் பண்ணிட இயலாது; அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்; பொறுத்துக்கவும் மாட்டேன்! எனக்கு ‘எல்லாம் தெரியும்!’ ஆமாம்!” ஆவேசத்தில் ஆரம்பித்த பிரசங்கம் ஆத்திரத்தில் முடிந்தது.

நேற்று இந்நேரம் பருவமழை.

இன்று இந்நேரம் பேச்சு மழை.

ஆசைக்கு ஒரு பெணணாக வாய்த்திட்ட புதல்வியின் சிடுமூஞ்சிக் குணத்தைக் கண்டு ரஞ்சனிக்குச சிரிக்கத் தான் தோன்றியது. ஆனால், ‘எனக்கு எல்லாம் தெரியும்’

42