பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று ஏன் அப்படி முத்தாய்ப்பு வைத்தாள்? இந்தப் பேச்சு அவளை அழவைத்துவிடும் போலிருந்தது.

ரஞ்சித்துக்குக் கோபம் வீரிட்டது. ‘எனக்கு எல்லாம் தெரியும்!’-பெற்ற மகளே பெற்ற அப்பனிடம் பூச்சாண்டி காட்டுவதா? சே!... ஆத்திரம் பீறிட்டது. “ஏ, நந்தினி” என்று சிம்ம கர்ஜனை செய்தார்; வீரபாண்டியன் மீசை கோபாவேசமாகத் துடிதுடித்தது!

நந்தினியின் ஈரல் குலை நடுங்கி விட்டது!- “அப்பா, உங்க மகள் ஏதாச்சும் தப்பாய்ப் பேசிட்டாளா?” சுடு நீர் மடை கட்டியது.

ரஞ்சித்தின் விழிகள் விரிந்து விரிந்து உருண்டன; உருண்டு உருண்டு விரிந்தன. “என் மகள் தப்பாகப் பேசுவாளா?... நீதான் தப்பாகப் பேசிட்டே!” கருமணிகளுக்குக் கரை கட்டி நின்ற ரத்தம், அவரது பேச்சுக்குக் கரை காட்டிற்று.

“அ...ப்...பா!”

நந்தினி கதறினாள்.

ரஞ்சனியின் நீலநயனங்களில் ஆடிப்புனல் ஓடுகிறது.

முகப்பு மண்டபத்தில், காவற்காரரின் தலை தெரிந்தது.

சூட்டோடு சூடாக, ரஞ்சித் எட்டிப் பார்த்தார். அவரது பார்வையிலே, அவருடைய ‘இம்பாலா’வுக்கு அருகில் வந்து நின்ற ‘செவர்லே’ பட்டுத் தெறிக்கிறது. ஒர் அதிசயம்!---செவர்லே ஒ-கே--விடிந்ததும் பணம் கிடைத்தால்தான், தன் வாழ்க்கை விடியுமென்று ராத்திரி கெஞ்சிக் கூத்தாடினார் படத் தயாரிப்பாளர் கைலாசம். சொன்ன சொல்படி வந்து குதித்துவிட்டார்!-அவருடைய கால்கள் பத்திரமாகவே இருக்கவேண்டும்!-வரவேற்புக் கூடத்திற்குச் செல்ல ஆயத்தப்பட்டார் பாங்கர் ரஞ்சித்.

43