உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுற்றுமுற்றும் நோக்கினாள். பாபு இன்னமும் ஏன் வரவில்லை? பாசம் உயிர்க்கழுவில் துடித்தது: 'கடவுளே!...'

“நான் இட்டிலி சாப்பிட்றேன், அம்மா.”

"ஊம்.’’

“ஏம்மா, என்னமோபோலே இருக்கே?"

"ஒண்ணுமில்லே, நந்தினி."

“நீ பொய் சொல்லுறே!’

"நான் ஏம்மா பொய் சொல்லப் போறேன்?”

"அதை என்னைக் கேட்டா?-பொய் என்கிறது என்ன? உண்மையை மறைக்கிறதுக்குப் பேர்தான் பொய். பொய் பேசித்தான் தீரணுமென்கிற ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தை உயிர்போற நிலைமையிலோ, இல்லே, மானம் போற நிலைமையிலோ, விதி உண்டாக்கினலொழிய,பொய் பேசவே கூடாதின்னு நீயே எனக்குப் பாடம் படிச்சுக் கொடுத்திருக் கியே, அம்மா?-பின்னே, ஒரு அற்பமான பொய்யை ஏம்மா நீ சொல்றே?’’

"நீ என்னம்மா சொல்லுறே, நந்தினி?”

"உன்னோட கண்ணு கலங்கிக்கிணே இருக்குது; நீயானா, ஒண்னுமில்லேன்னு பொய் பேசி மழுப்பித் தப்பிக்கிறியே, அம்மா?” -

ரஞ்சனிக்கு அழுகையைத் தவிர்க்கும் உபாயம் விளங்க வில்லை ‘பாபுவை நினைச்சேன்; கண் கலங்கிருச்சு: அவ்வளவுதான்," என்று உயிரும் உள்ளமும் உருகித் துடிக்க விம்மினாள்.

“இந்தச் சின்னத் துப்புக்கூட எனக்குத் தெரியாமல் போயிடுச்சே!-நான் சுத்த மக்கு. இந்த லட்சணத்திலே, எனக்கு எல்லாம் தெரியும்னு கொஞ்சம் முந்தி, நான்

40