பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொழுதுக்காகவே தவித்துக்கொண்டிருந்தாள் ரஞ்சனி. சோதித்தது போதுமென்று இனிமேலாவது பாபு பிரசன்னமாகித் தரிசனம் கொடுக்கலாகாதா?-விழிகளிலே பணிச் சிதறல்,

அழைக்கும் குரல், காற்றில் அழைக்கப்பட்டு வருகிறது.

உயிர்கொண்டவர், உயிர்கொண்டு அழைக்கிறாரென்றால் கட்டாயம் அவராகவேதான் இருக்கவேண்டும். ஆமாம்; அத்தான்தான் !-தயாரிப்பாளரைச் சந்திக்கத் தயாராகி இப்போதுதான் போனார்!

"ரஞ்...ரஞ்...! இங்கிட்டுப் பாரேன்!”

பாபு!...

பெற்ற மனம் பித்து ஆயிற்றே?- ஆனந்தம் முரசு கொட்டியது. பாதங்கள் பூமியில் நிலைக்கவில்லை. "பாபு, ஏம்ப்பா இத்தனை நேரமாயிடுச்சு?’ உள்ளம் தவித்த தவிப்பில், பாசமும் தவித்தது; தாய்மையும் தவித்தது.

பாபு ஏன் இப்படி ‘உம்மணாமூஞ்சி' ஆகிவிட்டான்?

பாபுவைச் சுமந்தவளால், பாபுவின் பயங்கரமான மெனனத்தைச் சுமக்க முடியவில்லை. ‘பாபு!’ என்று மறுபடி, கூவினுள் ரஞ்சனி.

பாபு: “......**

"நம்ம பாபுவுக்கு நம்ம பேரிலே கோபமாக்கும்!”

"ஏனுங்க?-நாம தப்பு கிப்பு பண்ணலீங்களே, அத்தான்?’’

"நாம தப்பு பண்ணாமல் இருந்திருந்தால், அவன் எதுக்குக் கோபப்படப்போறான்?-தங்கக் கம்பி ஆச்சே நம்ப பாபு?’’

51