பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டிருந்த பொல்லாத கறுப்பு மருவை வேண்டா வெறுப்புடன் நெருடிக் கொண்டே, எதுவுமே நடக்காத பாவனையிலும், கைப்பிடியாகப் பிடித்து நிறுத்தி வைக்கப் பட்ட மாதிரியிலும் நின்முன். அவன் ரோஷக்காரன்!-- அதனால்தான், வெறும் மெளனப் பிள்ளையாராகவே காட்சி தர முடிந்தது.

தாய் கலங்கினாள் .

தந்தை வருந்தினர்.

தமக்கை தவித்தாள்.

விடிந்ததும் விடியாததுமாக, வெறும் வயிற்றாேடு வீட்டுக்கு வந்த பாபு, "நான் ஏதாச்சும் ஒரு ஹாஸ்டலிலே போய்ச் சேர்ந்திடப் போறேன்", என்று வெடிகுண்டு ஒன்றை வீசினான்.

வெடிகுண்டு வெடிக்காமல் தப்புமா?

ரஞ்சித் பதறினர்; துடித்தார். ‘பாபு...பாபு.’’ என்று விம்மிப் பொருமினார்; "பாபு, எங்களையெல்லாம் தனியே விட்டுட்டு நீ ஏண்டாப்பா தனியா ஹாஸ்டலுக்குப் போகவேனும்?" என்று மன்றாடினர்.

பாபுவோ பழநி ஆண்டியாகவே சிரித்தான்! அவன் தான் சிரித்தானே? இல்லை, விதியேதான் அவன் உருவில் சிரித்ததோ?-"நிஜம்மாவே நீங்க என்னோட அப்பாவாக இருந்திருந்தா, அப்படி வன்மத்தோடே என்னே அறைஞ்சிருக்கவே மாட்டீங்க!" என்று நீதியின் தேவனாகத் தீர்ப்பு வழங்கினான்.

“ஐயையோ...தெய்வமே!'’ என்று கூப்பாடு போட்டு அலறிவிட்டார் ரஞ்சித்.

பாபு இப்பொழுது மெளனப் புன்னகை சிந்தினான்.

55