பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டுத் தலைவர்?-அவளுக்குச் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்ல. பாபுவின் கள்ளம் கவடு இல்லாத செக்கச் சிவந்த கன்னத்தில் கரும்புள்ளி குத்தியிருந்த அந்தப் பொல்லாத மருவை நடுங்கும் விரல்களால் அன்போடு தடவிக் கொடுத்தபடி, ஏம்ப்பா, இவ்வளவு நேரத்துக்கு நீ காலை டிபன் சாப்பிடாமலா இருந்தாய்?’ என்று கவலையுடன் கேட்டாள் ரஞ்சனி.

நயம் கலந்த விசயத்தோடு புன்னகை புரிந்த பாபு சொன்னன்: ‘நான் சாப்பிடல்லேன்னு சொன்னது வாஸ்த வந்தான். எங்க ஹாஸ்டலிலே நான் சாப்பிட்டது தோசை தான்; ஆன. எனக்கு இட்லின்னத்தான் பிரியம். இட்டிலி சாப்பிடலையேன்னு மனசிலே நினைச்சுக்கிட்டு, நான் சாப்பிடல்லே அப்படின்னு பொத்தாம் பொதுவிலே ஒரு போடு போட்டேன். அப்பாவாலே நான் இப்ப அகப்பட்டுக் கினு முழிக்க வேண்டிய தாச்சு!”

‘'சாமி, சாமி! என்னை வம்புக்கு இழுத்திடாதேப்பா,’’ என்று பாபுவிடம் கேட்டுக் கொண்டபின், தமது இனிய பாதியிடம் முழு வடிவத்தில் திரும்பி, ‘ரஞ்...நம்ம பாபுவுக்கு டிஃபன் கொடுத்திடு சீக்கிரம்; இல்லாட்டா, முருங்கை மரத்திலே மறுபடியும் ஏறிக்கிடுவான்,’ என்று அபாய அறிவிப்புக் காட்டினார் ரஞ்சித்.

‘'நான் ஒண்ணும் வேதாளம் கிடையாதுங்க, டாடி!” “அத்தான். நீங்க சும்மா இருக்க மாட்டீங்க?... என்னோட மகன் பாபுவை என்ன்ைனு நினைச்சிட்டீங்க? பாபுவா ...இல்லே?”

“மம்மி நான் கொக்கும் இல்லேயாக்கும்!”

‘சபாஷ்டா, தம்பி!” என்று கை தட்டினுள் நந்தினி. ‘பாபுன்ன பாபுதான்!”

‘பலே! அப்படிச் சொல்லு, அக்கா!’

59