உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருக்குடன் பேசி, ரஞ்சனியின் கால்களைத் தொட்டு வணங்கிக் கண்களிலே ஒற்றிக் கொண்டபோது, தன் கைகளில் கண்ணின் சொட்டுக்கள் சிதறித் தெறிக்கவே. பதட்டத்துடன் எழுந்த கைலாசம், அதே பதட்டத்துடனே ஏறிட்டுப் பார்த்து, "பாவி, நான் உங்களையும் கண்கலங்கிட வச்சிட்டேனே?" என்றார்.


ரஞ்சனியும் பேசத்தான் நினைத்தாள். ஆனல் பேச்சு வந்தால்தானே? -

படபடத்து அடங்கியமழைத் தூற்றலில் புறப்பட்ட மண் வாசனை அடங்கவில்லை தை மேகக் கறுப்பும்கூட அடங்கவில்லைதான்.

ரஞ்சித்தின் மனத்தை என்னவோ செய்தது!

கைலாசம் விடைபெற்ற சமயத்தில், பாபுவை நெருங்கி அவன் தோளில் தட்டி, ‘பாபு, நீ தாம்ப்பா நிஜமான ஹீரோ!’ என்று புகழவும் தவறிவிடவில்லை.

பாபு தோளைத் தடவி விட்டவகை, மீண்டும் சூன்யத்தை வெறித்து நோக்கினான்.

ஒமேகா கூவுகிறது.

வேளை கெட்ட வேளையிலே, நந்தினி விலாசம் பங்களா வின் உணவுக் கூடத்தில் மணி பதினென்றுக்குக் காலைச் சிற்றுண்டிக்கான சந்தடிகள் திரும்பவும் திரும்பின.

ரஞ்சனி சகஜ நிலையில் இயங்கினாள்: வெள்ளித் தட்டுக்களே ஒவ்வொன்றாக நகர்த்தி, தான் போட்டு வைத்திருந்த கணக்குப் பிரகார்ம், இட்டிலிகளை எண்ணிச் சரி பார்த்து நிரப்பினாள்; பாபு, நந்தினி என்று பெயர் சொல் லிக் கூப்பிட்டு அவரவர்க்குரிய தட்டை நீட்டினுள். பீரோவிலிருந்து எடுத்த புதுப் பிளேட்டைச் சேலைத் தொங்கலால் துப்புரவாகத் துடைத்து, அதில் நான்கு

64