பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 
அந்தி நிலாச் சதுரங்கம்

4. கேரளத்தின் பூஞ்சிட்டு!

மகேஷ்...!

அன்பே வடிவமாக அமைந்திட்ட இன்னுயிர்த் துணைவர் ரஞ்சித்தை வேடிக்கையானதொரு குதூகலத்துடன் முந்திக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக வெளிப்புறம் வந்து நின்ற ரஞ்சனிக்கு, இப்பொழுது இனம் விளங்காக ஒரு தவிப்பு மேலிட்டது; தவிப்பின் சல்லாபமான-வாத்சல்ய மான மன உணர்வுகளுடன் முகப்பு மண்டபத்தின் பிரதானமான வாசற் கதவுகளைத் திறந்ததுதான் தாமதம்: சூறைக்காற்றில் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டவளாக ஒர் அரைக் கணம் தட்டித் தடுமாறினாள்: மூச்சுத் திணறிற்று; வேர்த்துக் கொட்டியது!--- எல்லாம் அரைக் கணம்தான்!-மறு இமைப்பில், அவள் சுயப் பிரக்கினையைச் சாமர்த்தியமாக மீட்டுக்கொண்டாள். மீட்டுக்கொள்ள வேண்டியவள் ஆனாள்:-“மகேஷ், வாங்க, வாங்க!”