பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசிக்கிட்டு இருப்பிங்களாம்; நான் போய் டிஃபனுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வந்திட்றேனுங்க," என்றாள்: டி. வி. பெட்டிக்கு அடியில் பிரத்தியேகமாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த வனிதா மலையாள இதழை எடுத்து அதை ரதியிடம் பான்மையுடன் கொடுத்தாள்.

‘நன்னி' பறைந்தாள் ரதி. கண்களிலும் உதடுகளிலும் நன்றியறிவு துலாம்பரமாகப் பளிச்சிடுகிறது. அம்மா, ராவிலேயே நாங்க டிஃபன் கழிச்சிட்டோம்; ரொம்ப ஹெவியான சாப்பாடு; எங்க கேரளத்து நட்சத்திரம் மிஸ் மாலினி வச்ச விருந்தின்னா, சாமான்யமா இருக்குமா? மணி இப்ப பந்துரெண்டு ஆகப்போறது; டின்னரை நாங்க இங்கேயேதான் முடிச்சுக்கப் போறோம்,’ என்றாள் அவள்.

“ஆமாங்க, ரஞ்சனி," என்று மகேஷ் ஆமோதித்தார்.

ரஞ்சனிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது!-ரதியின் பேச்சிலே, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகத் தமிழும் மலையாளமும் எவ்வளவு அழகாகவும் பாசமாகவும் கூடிக் குலாவுகின்றன!-ரதி எங்க வீட்டுக்குப் புதுசு; இங்கே காலப் பலகாரம் சாப்பிடுறத்துக்கு ஏதோ சாக்குப்போக்கு சொல்ருங்க சரி, ஆனா. மகேஷ் ஏன் தயங்கவேணும்?ரதியோடே சேர்ந்து அவரும் “ஆமாம், சாமி போடுகிறரே?--ஏன்?

வீட்டுக்கு வந்திருந்த அந்நியப் பெண்ணுன ரதியோடு சேர்ந்து கொண்டு, அந்நியோன்யமாகப் பழகிய மகேஷ் ஆமாம் போட்டுக் காலை வேளைச் சிற்றுண்டி சாப்பிடாமல் தப்பிவிட முயற்சி செய்ததை ரஞ்சித் விரும்பவில்லை. *மகேஷ்,” என்று அழைத்தார்; நீங்க காலம்பற டெலிஃ போனிலே என்கிட்ட பேசின தாக்கல் தெரிஞ்சதுமே, என்ளுேட அன்பு ரஞ்சனி உங்களுக்காக இட்டிலியெல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டாளாக்கும்; நீங்களான, உங்க ரதியோடு சேர்ந்துக்கினு டிமிக்கி கொடுக்கப் பார்க்கறிங்க:

71