பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண் ஜாடைகள். மிளகாய்ப் பொடியையும் நெய்யையும் கொணர்ந்தன. வேட்டியைத் தளர்த்தி விட்டுக் கொள்ளவும் அவர் மறக்கவில்லை; 'என் மகாராணி கை பட்டால் மிளகாய்ப் பொடிகூட மனக்குதே? இப்பவே கணக்குக்கு மிஞ்சிச் சாப்பிட்டிட்டேன்; போதும், போதும்!' வேகமாக உண்டு முடித்து, வேகமாகவே எழுந்தார். பேஸினில் கையை அலம்பி, அருகில் கம்பியில் கிடந்த துருக்கித் தேங்காய்ப் பூத்துவாலேயில் கையைத் துடைத்துக் முகத்தை நிமிர்த்தி, நிலைக்கண்ணுடியில் நிலை பாய்ந்திருந்த முகத்தை ஊடுருவிப் பார்த்துச் சலனம் கண்ட நிலையில், தமது இருப்பிடத்தில் வந்தமரலானார் ரஞ்சித்.

எதிரே:

சீமாட்டி டவ ரதியிடம் நீட்டினாள் ரஞ்சனி.

மகேஷாக்குக் கொடுக்கப்பட்ட ஜோஸ் துண்டு கை நழுவியது.

‘பார்த்துக் கொடுக்கப்படாதா, ரஞ்?’ என்று கேட்டார் ரஞ்சித்.

ரஞ்சனியின் அழகு வதனம் சிறுத்தது.

மகேஷ் பிரமித்தார்.

‘ரஞ்சனி, ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே?-சும்மாதான் கேட்டேன்; சாதாரணமாகத்தான் சொன்னேன். நீ துண்டை நீட்டினதையும் பார்த்தேன்; நீ நீட்டின துண்டை மகேஷ் வாங்கினதையும் பார்த்தேன்; நீங்க ரெண்டு பேருமே அளவுக்கு மீறின எச்சரிக்கையோடேதான் நடந்துக் கிட்டிங்க; ஆனலும், உங்க ரெண்டு பேரையும் மீறி, துண்டு என்னவோ கீழே விழுந்திடுச்சுது! பரவாயில்லே! வெகு அமெரிக்கையாகவேதான் ரஞ்சித் இவ்வாறு கூறினார்.

75