பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனால்-

ரஞ்சனியின் வதனம் ஏனோ கறுத்தது. மகேஷின் முகம் ஏனோ கருங்கியது. ஒரு மாத்திரைப் பொழுது கழிந்திருக்கவேண்டும்.

தலையைக் குனிந்தபடி, துண்டை எடுக்க முனேந்தாள் ரஞ்சனி.

அதற்குள், மகேஷ் எடுத்துக் கொண்டார்.

"ரஞ், என்ன யோசனையிலே மூழ்கிட்டே?- டேக் இட் ஈஸி, டியர் !...ஊம், எல்லாருக்கும் காஃபி கொண்டாந்து கொடேன்!”

வரவழைத்துக் கொண்ட புன்சிரிப்பைச் செவ்வதசங்களில் சதுரங்கம் ஆடச் செய்தவளாக, ஊம் கொட்டி நகர்ந்தாள் இல்லத்தரசி.

அந்த டவல்கள் நினைவூட்டிய மலையாளச் சீமைச் சுற்றுலாவில் ரஞ்சித்தின் மனம் சுற்றி, பின்பு, திரும்பும் வழியில் பழனி மயிைல் நடந்த பாபுவின் கோபாவேசப் படலத்தில் நிலைக்கத் தொடங்கியது; பாவம், மகேஷிடம் அன்று தினம் என்னுடைய பாபு எத்தனை நிரத்தாட்சன்யமாக நடந்து கொண்டு விட்டான்!. அவரது இதயத் தின் இதயம் தன்னுடைய செல்வத்திருமகன் பாபுவின் சார்பிலே மீண்டும் ஒரு தரம் மகேஷிடம் பாவமன்னிப்புக் கோருகிறது!...

சாப்பாட்டு மேஜையில் காப்பி-டபரா அடுக்குகளைப் பரப்பினுள் ரஞ்சனி, உரிமையுடன் அண்டி வந்த சதியிடம் அவளுக்குரிய காப்பியைக் கொடுத்துவிட்டு, அவள் நண்பர் மகேஷிடம் “டிகாக்ஷன் கம்மியாகப் போட்டிருந்த காப்பியைக் கொடுக்கும்படி வேண்டினாள். சர்க்கரை போடாமல்

76