பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறதுக்கு சான்ஸ் அடிச்சிட்டுது எங்களுக்கும் ஓய்வுக்கு வழி கிடைச்சிட்டுதுங்க!’ -

"ஆனா. ஒண்ணு...!”

"ஒண்னு என்னங்க, ரெண்டாகவே சொல்லுங்க!”

"உங்க ரெண்டு பேரோட ஓய்வும் இப்போதைக்கு சென்ட் பர்சன்ட் தனிமையானதாக்கும்: . . ஆமாம், இப் போதைக்குத்தான்!”

"ஒஹோ! அங்கிட்டுப் போயிட்டீங்களா நீங்க?”

"நான் எங்கிட்டும் போயிடல்லே; போயிடவும் மாட்டேன்; என்னோட வழியே, அலாதி!-அந்த வழியிலே எந்த ஒரு சோதனையிலும் தப்பிதமே ஏற்படாது: ஏற்படவும் விட்டுவிட மாட்டேனாக்கும்!”

“மக்கள் குரல்' பொங்கல் சிறப்பிதழை ரதியிடம் நீட்டி, அதில் கடைசிப் பக்கத்தைப் பிரித்து, ரத்தியின் பொங்கல் வாழ்த்துக் கட்டுரையை வாசிக்கச் சொன்ன மகேஷ் திடுக்கிட்டுப் போனார்!... -

ரதி: “நான் இந்திக்குப் போனாலும், என் தாய்த் தமிழ்ப் படஉலகம் நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்!”

"அய்யொடா!...ரத்தி மாதிரி என் ரதியும் நடிகை ஆயிட்டாளா, என்ன?”

உற்சாகமான நாணம் ஏந்துகிறாள் ஏந்திழை: என்னை இப்படிக் கலாட்டா பண்றதுக்கோசரம்தான் என்னை அப்படி வாசிக்கப் பண்ணிணேளாக்கும்?’

“சும்மா ஒரு தமாஷ்: அவ்வளவுத சன், ரதி!"

காதல் எனும் எழிற்கனவின் இனிய மயக்கத்தில் லயித்துக்கிடந்த அவ்விருவரின் ஆனந்தப் புரவசம் நின்று

79