பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலைத்திடவேண்டுமென்று அந்தரங்க சுத்தியோடு கவலைப் பட்டார் ரஞ்சித். 'மகேஷ் தனது முதல் காதலிலேதான் தோல்வி அடைஞ்சிட்டார்: பாவம், இரண்டாவது காதலிலேயாவது அவர் முழு வெற்றி அடைஞ்சால்தான் நல்லது. ரதிக்கும் மகேஷீக்கும் ஜோடிப் பொருத்தம் சரியாக அமைந்திருக்கிறதா என்கிற பரிசோதனையில் ஈடுபட்டவர்மாதிரி, அவர்கள் இருவரையும் உன்னிப்பாகவும் உறுத்தும் பார்த்தார்; பார்வையிட்டார். எடுத்த எடுப்பிலேயே, இருவருக்கும் ஊடே தாரதம்மியம் துலாம்பரமாகவே தெரிந்துவிடும்; மகேஷின் நரைமுடிகளால் வன வாசம் செய்யமுடியவில்லைதான்; ஆனாலும், அவருடைய இடது கன்னத்தில் ஏதோ ஒரு வடு விகாரமாகப் பளிச்சிடுகிறதே?-அதை ஒரு பொருட்டாக மதித்து அவரிடம் பிரஸ்தாபிப்பது அவ்வளவு நாகரிகமாக அமைய இயலாதென்கிற கண்ணியப் பண்புடனே அதைப்பற்றி இன்றையத் தேதிவரை அவரிடம்-மகேஷிடம் கேள்வி ஒன்றையும் கேட்கவில்லை ரஞ்சித்!-ஆனால், ரதி உச்சியில் நின்றாள்! அவள் அழகின் உச்சி ஆயிற்றே?-ஆமாம்; நேற்று மலர்ந்த புத்தம் புதிய ரோஜாப்பூ அவள்! ரோஜாப்பூவை அவள்! ரோஜாப் பெண் ரதி!...

மகேஷ் ஏன் அப்படி முகம் கறுத்துப் போய்விட்டாராம்?-இன்னமும் ரஞ்சித்தின் சொற்கள் அவரது நெஞ்சிலே சுட்டுக்கொண்டிருந்தனவோ? -

ரஞ்சித் மார்பகத்தைத் தடவி விட்டுக்கொண்டார்; என்னவோ ஒர் ஆறுதலான அமைதி இப்போது அவர் நெஞ்சில் ஒட்டியிருந்ததாக அவர் உணர்ந்தார். ‘பாவம், மகேஷ்! ஈரம் விழிகளிலும் நிழலாடிற்று. ‘"நான் புறப்படறேன், மகேஷ்,’ என்று எழுந்தார். சாயந்தரம் முதல்வர் புரட்சித்தலைவரைச் சந்தித்தாக வேண்டும்!

ரஞ்சனியின் முகம் தெரிகிறது.

80