"நான் ஊகிச்சது சரியாய்ப் போயிடுச்சுங்க, மகேஷ், நீங்க சொன்னமாதிரி, நிஜமாகவே நான் சந்தோஷப்படுறேனுங்க. உங்க கலியாணம் நல்லபடியாகவே முடிஞ்சிட்டா நான் உண்மையாவே அமைதியும் அடைவேணுங்க, மகேஷ்!”. உணர்ச்சி வயப்பட்டவளாகப் பேசினவள் ரஞ்சனியாகத் தானே இருப்பாள்?
"உங்களோட இந்த நல்ல முடிவிலே, நானும்தான் ஆறுதலடைகிறேன். மிஸ்டர் மகேஷ்!” என்றார் ரஞ்சித்.
மகேஷ் சற்றே திரும்பி, ரஞ்சனியை நோக்கி, அமைதி கெடாமல் புன்னகை செய்தார். "உங்க ரெண்டு பேரோட மகத்தான அன்பையும் அற்புதமான பாசத்தையும் நான் இன்றைக்கு நேற்றைக்குத்தான புரிஞ்சுக்கப் போறேன்?-ஆனாலும், நாம என்னதான் நெருங்கியும் நெருக்கமாகவும் பழகினால்கூட, உள்ளன்பை வெளிப்படுத்திப் பரஸ்பரம் பரிமாறிக்கிடுறதிலே மெய்யாகவே மனசுக்கும் சரி, உடம்புக்கும் சரி, ஆரோக்கியமாகத்தான் இருக்குது! இப்படிப்பட்ட சமயங்களிலே, மரபார்ந்த சம்பிரதாயங்களுக்குக்கூட புதுசான அர்த்தம் கிடைச்சிடுறது போலவும் நமக்கு நாமே உணர்ந்துக்கிடுறதுக்கும் வாய்ப்பு வசதி ஏற்படவும் செஞ்சிடுது!-இல்லீங்களா, ரஞ் ...?" என்றார்.
“ரஞ்’ என்றவுடன், ரஞ்சித்தும் மகேஷை ஏறிட்டு நோக்கினார், -
அதுபோன்றே, ரஞ்சனியும் கோலமதர் விழிகளை நிமிர்த்திக் குடும்பத்து நண்பரைப் பார்க்கலானாள்.
ரஞ்சித்தின் கண்களிலே கலக்கம்.
ரஞ்சனியின் நயனங்களிலே சலனம்.
மகேஷ் திடுக்கிட்டார் ; விம்மிப் புடைத்திட்ட நெற்றியின் நரம்புகளை மூர்க்கத்தனமான ஆத்திர
82