உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்றும் சமாதானம் செய்ய முடியாதது போலவும் வாயடைத்து நின்றாள்.

"மகேஷ். மகேஷ்!” ரதி தவித்தாள்.

ரஞ்சித். ரஞ்சனி, ரதி ஆகிய மூவரையும் மாறிமாறி, மாற்றி மாற்றிப் பார்த்தார் மகேஷ். "என்னவோ, தெய்வத்தைக் கூவி அழைச்சு அழவேனும் போலத் தோணிச்சு: அழுதேன்; என்னோட உயிர்மூச்சு நின்னுத்தான், இந்த அழுகை நிற்குமுங்க. ரஞ்சித். அது போகட்டும்.!" என்று கூறிப் பேச்சைத் துண்டாடினார்; பிறகு, ரஞ்சனியின் பக்கம் திரும்பி, "என்னமோ ஞாபகத்திலே, ரஞ்சித் கூப்பிடுற மாதிரி உங்களை 'ரஞ்' அப்படின்னு தெரியாத்தனமாக கூப்பிட்டிட்டேனுங்க எனக்கு “மாப்பு' கொடுத்திடுங்க,’’ என்று கெஞ்சினார்.

அழகான அன்பும், கவர்ச்சியான அழகும் ஆரோகளித்திருந்த அதரங்கள் துடித்திட, “பரவாயில்லேங்க, மகேஷ்,’ என்பதாக ஆறுதல் சொன்னாள் ரஞ்சித்தின் ரஞ்சனி, கண்களின் தொங்கலில், சுடுநீர் முத்துக்கள் தொங்கட்டான்கள் மாதிரி இரு முனைகளிலும் முனைப்புடன் ஊஞ்சலாடின.

ரஞ்சித் மார்பகத்தினின்றும் கைகளை விடுவித்துக் கொண்டவராகக் கண்ணியமானதொரு புன்முறுவலைக் கண்ணியமாக வெளியிட்டார், “நீங்க போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கங்க; டின்னர் ரெடியானதும் ரஞ்’ வந்து எழுப்புவாள்; நீங்களும் போங்க, ரதி,’’ என்றும் கூறினார். பட்டுச் சொக்காயைக் கையில் எடுத்துக் கொண்டார்; எழுந்தார்.

“அது சரி; நம்ம பாபுவை எங்கே காணோம்? இன்னிக்கு லீவு தானே? இங்கே வந்திருப்பானே?" என்று விசாரணை செய்தவரும் மகேஷ்தான். விசாரிப்பைத் தொடங்கிய

84