உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போது அவரது தொனியில் ஒலித்த தைரியம், கேள்வியை முடித்தபோது அடங்கி விட்டிருந்தது.

"பாபு அவனோட ரூமிலே தாங்கிக்கிட்டிருப்பான்னு நினைக்கிறேன்," என்றாள் பாங்கர். "பாபுவைப் பார்க்கணுமா?" என்று வினவினார்.

'ஊம்’, கொட்டினார் மகேஷ்.

தேள் கொட்டின பாங்கில் ஒரு துடிப்பு ரஞ்சித்தின் மேனியில் ஊடுருவியது: "அதுக்கென்ன?--பாபு தூங்காமல் முழிச்சுக்கிணு இருந்தால், தாராளமாகப் பாருங்களேன், மகேஷ்!" என்று நல்ல குரலெடுத்து அனுமதியை வழங்கினார். ‘பாபுவுக்கு உண்டான இடம்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே?-புறப்படுங்க: போனதும் வந்ததுமாய்த் திரும்பிடுங்க, நீங்க திரும்பினதும்தான், நான் மேலே மாடிக்குப் போகவேணும், மகேஷ்!" இப்போது அவரது கண்டத்தில் சற்றே கடுமை ஊடாடியது.

“இதோ. வந்திடுறேன், ரஞ்சித்!" என்று ஒரு புதிய தெம்புடன் கிளம்பினார் மகேஷ்.

"மகேஷோடு நீ வேணுமானலும் போயேன், ரஞ்சனி?"

“நான் போகல்லீங்க, அத்தான்; நேரம் நெருங்கிக் கிட்டிருக்குதுங்களே?-விருந்துக்கு ஏற்பாடு செஞ்சாக வேணுமுங்களா?" ரஞ்சனி சமத்காரமாகவும் சமர்த்தாகவும் பேசிவிட்டாள்.

“ஒ!. உன் இஷ்டப்படி நட, ரஞ்!”

மகேஷசம் ரஞ்சனியும் எதிரெதிர்த் திசைகளில் மடங்க வேண்டும் போலும்!

ஆ-8

85