பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித் சுழல் நாற்காலியில் அமர்ந்த நேரத்தில் அவர் மனம் தெளிவாகவே இருந்தது; “ஹெல்லோ!“...“என்று குரல் கொடுத்தார். எதிர்முனையில் ஒலித்த குரல் சரிவர விளங்காததால், மீண்டும் சத்தம் போட்டு “ஹெல்லோ! என்றார். இப்பொழுது கேட்ட தொனியில் சற்றே தெளிவு இருந்தது. “எஸ்.ப்ளீஸ்...நந்தினி விலாசம் ஹியர்!”

எதிர்முனையிலிருந்து சன்னமாக இழைந்து வந்த குரலில் சுருதி கூடிற்று.

ஓ!...மகேஷ்!..

ரஞ்சித் சலனம் அடைந்தார்; மூச்சு அடைத்தது. சூறைக் காற்றில் சிக்கிக்கொண்டாரா, என்ன? வேர்வை பெருகியது; பெருக்கெடுத்தது. கண்ணாடி ஜன்னல் மூடிக்கொண்ட மாதிரி திறந்துகொள்ளவே, தென்புறக் காற்று வீசியது; நிலைமை சீரடைந்திருக்கவேண்டும். மகேஷ் கொச்சியிலிருந்து பேசுகிறாரா?-“ஆமாங்க, நல்ல சுகந்தான்! நீங்க நல்லா இருக்கீங்களா?...ம்...ம்...சந்தோஷம். ரஞ்சனிதானே?.. ஊம்; ஷி இஸ் ஆல் ரைட் நெள!--நெஞ்சு வலி இப்பவெல்லாம் வாரதில்லேங்க, நந்தினி,பாபு எல்லோருமே செளக்கியம்தான்! ஓ!--- இங்கே மெட்ராஸிலேருந்துதான் பேசறீங்களா?...ஆபீஸ் ஜோலியாக்கும்! . . சரி. . ம். . சரி! . . இப்பவே புறப்பட்டு வர்றீங்களா?--பேஷா வாங்களேன்! உங்க வீட்டுக்கு நீங்க வாரதுக்கு யாரைக் கேட்கணும்? உங்களை வரவேற்கக் காத்துக்கிட்டிருக்கோம்!. . ம். . என்ன . . ?” தொடர்ந்த பேச்சைத் தொடர வாய்ப்பு இல்லை; தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சுகமான காற்று சுகமாக வீசியது.

நெஞ்சிலே படரத் தொடங்கிய பூங்காற்று, நெஞ்சின் சுமையைக் குறைக்க முயற்சி செய்ததை உணர்ந்தபோது,

7