பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாக்கியவான் இந்த மண்ணிலே வேறே. யாருமே இருக்க மாட்டான்; இருக்கவும் முடியாது!-ஊம் பாபுவை என்னோடு வச்சுக் கிட்டால்தான, எம் மனசு நிலைக்கு வந்து, அமைதியடையும் போலத் தோணுது ரதியும் என் திடடத்துக்கு ஒ-கே சொல்லி, சம்மதம் . சொல்லிட்டாளே? ஐயப்பா குருவாயூர் அப்பனே!-முகத்தைத் துடைத்து, நெடுமூச்சைப் பிரித்து, அரைக் கணம் அஞ்சி ஒடுங்கி நின்றவர், மறுபடி சுதாசித்து: கொண்டார்.

வேடிக்கையான தியாகராயநகர்!

கார்ச் சத்தம் ஒயாதோ? ஒழியாதோ?

தட்ட வில்லை.

ஆனால், கதவு திறந்தது.

'பாபு!' -உள்ளே மகேஷ் விரைந்தார்: பாய்ந்தார் மகேஷ்.

ஒடக் காண்பது, பூம்புனல் வெள்ளம்.

ஒடுங்கக் காண்டதோ, யோகியர் உள்ளம்.!

திருமூலரா, கொக்கா?" ...

மகேஷ் மனம் ஒடுங்கிக் காணப்பட்டார்!- ஆனல் அவர் யோகி ஆகிவிட மாட்டார்: ஆகிவிடவும் முடியாது!-என்ன குழப்பம்? ‘பாபு உறக்கத்திலே இருக்கானே?-மின் காற்றைச் சட்டை செய்யாமல், அவருடைய “பாலியஸ்டர் சட்டை ஈரமாகிக்கொண்டே இருந்தது. இருதயத்தின் இரு பிடத்தை ஒரு வெறுப்புடன்-விரக்தியுடன் தடவினர். தடவி விட்டார். "பாபு! பாபு!" --சொற்கள் விடுதலை பெற்றன ஆனால், பாபு தூக்கத்தினின்றும் விடுதலை பெற்றால் தானே?-அவருக்கு நெருப்பில் நிற்பது போல் தோன்றியது

88