பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஐயையோ!"-ஓலமிட்டவராக அங்கிருந்து ஒடிப்போய் விட முனைந்தார் மகேஷ்!-ரஞ்சித்-ரஞ்சனி குடும்பத்தின் நண்பரான மகேஷ்: 'ஞான் பாவப்பட்ட ஜென்மம்!...”

அப்போது:

கதவு திறந்த அரவம் கேட்டது.

அரவம் கண்ட பாவனையில், அச்சமடைந்து, திரும்பிப் பார்த்தார் மகேஷ் ‘பாபு...!’ என்று தன்னையும் மறந்து விட்ட நிலையில் மகிழ்வின் பூரிப்புடன் கூவி அழைத்தவாறு, பாபுவிடம் பாய்ந்தார்.

"மகேஷ் ஸாரே!...நான் அவசரமாக பாத்ரூம் போய்க்கிணு இருக்கேனாக்கும்!:”

“திரும்பி வா, பாபு: நான் காத்துக்கிட்டு இருப்பேன்!"

"ஏனாம், ஸாரே?”

"உனக்காக!”

"எனக்காகவா?”

"ம்!....

ஏன்?*

“......”

"என்ன ஸார், பேச்சையும் காணோம்? மூச்சையும் காணலையே? ஐயோ, பாவமே, பரிதாபமே!...போனவனுக்குத் திரும்பத் தெரியாதாக்கும்?...நீங்க வெளியே போங்க எங்கே, வேகமாய்ப் போங்க, பார்க்கலாம்!... ம்...எங்க அப்பா உங்களைக் கூப்பிடுறமாதிரி இருக்கு; ம், ஜல்தி போங்க, ஸாரே!”

பாபு போய்விட்டான்.

92