பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

103


4

ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளி தேவத்திருச் சந்நிதனத்தில் நின்று மெய்யுருகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள், சிருங்காரபுரி நாட்டின் இளவரசி கன்யாகுமரி.

ராஜ குடும்பத்தவர்க்கென்று தனிப்பட்ட முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது அக்கோயில், அரண்மனைக்குள்ளாகவே இருந்தது அது.

கன்யாகுமரி மட்டிலுமே அம்மனைத் தரிசிக்க வந்திருந்தாள். அவள் தன் தந்தைக்கு மட்டும் புதிராகவும்-புதிர் விளங்காத விடுகதையாகவும் தோன்றவில்லை! அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் கூட, அவள் எல்லோருக்குமே ஒரு வினாக் குறிதான்! இப்படிப் பட்டவள் அவளை ஈன்ற மகாராணிக்கு ஓர் ஆச்சரியக் குறியாகவே திகழ்ந்தாள். ‘என் மகள் பரம்பரை வழி வருகிற அசட்டுக் கொள்கைகளிலும் வெறும் சம்பிரதாயங்களிலும் துளியளவும் நம்பிக்கையற்றவள். அவள் பிற்காலத்தே ஒரு புரட்சிப் பெண் ஆவாள். ஏனென்றால், அவள்பால் பண்பட்டுள்ள மனிதாபிமானப் பண்பு அவளை இப்படி ஆக்கியுள்ளது. நாட்டு மக்களுக்கு அவள் பேச்சு என்றால் தேனும் தினைமாவும் சாப்பிட்டது மாதிரிதான்!... என்று புகழ்ந்தார்கள்.

ஆம், கன்யாகுமரி என்றால் நாட்டு மக்களுக்குத் தனித்த ஓர் ஆர்வம் தழைத்தது. “மகாராஜாவுக்குச் சந்ததி இனி எங்கே உண்டாகப் போகிறது?... ஆகவே இளவரசிதான் பட்டம் சூட்டிக் கொள்வார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், நம்நாடு புதிய பாதையில் கண் விழிக்கத் தொடங்கி விடும்!.... அவர்களுக்குத் திருமணமாகி, சகல சௌபாக்கியங்களையும் கடவுள் அருள வேண்டும்!” என்றே அனைவரும் முன்பு வாழ்த்தினார்கள். பெருமை சிறுமை பாராமல் பட்டி தொட்டிகளெல்லாம் அவள் கால்