பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

109


கிடைத்தது! இன்று நீ அப்பெயரைத் தட்டிக்கொள்ளப் போட்டியிடுகிறாய் போலிருக்கிறது!...கன்யா! எனக்கு யாரும் புத்தி புகட்ட வேண்டாம்!... என் கவுரவம் எப்போதுமே என்னிடம் மாசுபடாமல் தங்கிவிடும். நீ போகலாம்!...நாடு என்னுடையது!...” என்று தூக்கலான குரலில் பேசினார்.

“ஆனால், மக்கள் உங்களுடையவர்களாக எப்போதும் இருக்கமாட்டார்கள்! கவனமிருக்கட்டும் தந்தையே!...” என்று பதில் அளித்தபின் அங்கிருந்து விடைபெற்றாள் கன்யாகுமரி.

இவர்களின் பேச்சுகளை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த நாதசுரபி, சடக்கென்று திரை மறைவினின்றும் விலகிக்கொண்டு, அப்போதுதான் உட்புறமிருந்து வெளிக்கிளம்பி வருபவள் மாதிரி வந்தாள். கையில் குழந்தை சிரித்தபடி இருந்தது.

கன்யாகுமரியும் குழந்தைக்காக அனைத்தையும் மறந்தாள். அவன் நிமித்தம், தன் தந்தை புதிய செவிலியின்மீது கொண்டுள்ள மோகத்தையும் மறந்தாள். இந்நிலையைத் தவிர்க்கக் கடப்பாடு கொண்ட நாதசுரபியையும் மன்னித்து மறந்தாள்.

எதிர்ப்பட்டாள் நாதசுரபி.

இளவரசி, குழந்தையை வாங்கி கால்நாழிப் பொழுதுவரை கொஞ்சினாள்; உச்சிமோந்தாள்; முத்தமாரி பொழிந்தாள், இன்பக் கண்ணிர்விட்டாள்.'அம்மா!... அப்பாவின் எதிர்காலம் பயங்கரமாக இருக்கும் போலத் தோன்றுகிறதே!... என்று மனத்திற்குள் வருந்தினாள். தெய்வத்தை வேண்டினாள். அவள் நாதசுரபியை ஆழ்ந்து பார்த்தாள்.

“இளவரசி! தயைசெய்து என்னைத் தவறுபட எண்ணாதீர்கள். நான் விஷம் ஏதும் இல்லாத ஏழைப்பெண். என் நெஞ்சுரம்தான் என் பெண்மைக்கு–கற்பு நிலைக்குக் காப்பு. இதோ, பாருங்கள், இந்தப் பவளமாலையை உங்கள் மதிப்புக்குரிய