பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

இளவரசி வாழ்க



இளவரசி நாணம் மீட்டி நின்றாள்.

அது தருணம், நாதசுரபி அங்கு தயங்கியபடி வந்தாள். மன்னர் அவர்களை, முதல்மந்திரி உடன் சந்திக்க வேண்டுமென்ற மன்னரின் ஆணையைப் பணிவுடன் சமர்ப்பித்துவிட்டுச் சென்றாள்!

7


சிருங்காரபுரி நாட்டின் மாமன்னர் பூபேந்திர பூபதி, பட்டுப் பீதாம்பரம் பொலிய, கம்பீரமான தேஜசுடன் வீற்றிருந்தார்.

நளினமிகு ஓய்வு மண்டபம் அது.

அங்கு சிரம் தாழ்த்திக் கரம் குவித்து வந்தார் மந்திரிகளுக்குத் தலைவர், அழகண்ணல். அமர்ந்தார், அரச ஆக்கினைப்படி. இருவரும் ஒருவரையொருவர் பொருள்செறிவுடன் ஓரிரு கணங்கள் வரை பார்த்துக் கொண்டனர்.

“மன்னர் அவர்கள் சிந்தனை வசப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது!...நான் இருக்க, நீங்கள் எதற்காக மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டும்?...இளவரசரைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டியது ஒன்றுதான் உங்களது தலையாய கடமையாகும். வரும்போது இளவரசைப் பார்த்து விட்டுத்தான் வந்தேன்.”

“அப்படியா? மெத்த மகிழ்ச்சி!”

பூபதியின் நன்றியுணர்வு, புன்னகை காட்டியது. மறுபடி தொடரலானார்: “வருகிற விசாக பெளர்ணமியன்று வேழநாட்டின் மீது நாம் படையெடுக்க வேண்டும். ஆகவே இடையுள்ள இந்த ஒரு மண்டலப் பொழுதை துளியும் வீணடிக்காமல் பயன்படுத்தி, நம் படைபலத்தைப் பெருக்குவதற்கான உத்தரவுகளையும்