பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

115


திட்டங்களையும் செயற்படுத்துங்கள். வேழநாட்டானுக்குப் பல பல வெளி வியவகாரங்களாம்! நாம் தாக்கப் போகும் விஷயம் இதுவரை அவனுக்குத் தெரியவே நியாயமில்லை. தெரிந்திருந்தால், எச்சரிக்கையுடன் படைக்கல வீடுகளையும் பாசறைத் திடல்களையும் பற்றி அக்கறை காட்டாமல் இருப்பானா? நம் ஒற்றர்கள் வெகு கண்காணிப்புடன் அந்நாட்டிலே உலவி வருகிறார்கள்! அடுத்து...ஆம்; இளவரசிக்கு மணம் செய்தாக வேண்டும்!...அவள் பேச்சு மட்டுமல்ல, போக்கும் புதிராக இருக்கிறது. சதா கூத்தரங்கில் ஏதோ ஆராய்ச்சி நடத்துகிறாளாம்!....வேழநாட்டரசன் விஜயேந்திரனை ஒருமுறை காண வேண்டுமென்று துடிக்கிறாளாம் நாதசுரபியிடம் சொல்லியிருக்கிறாள்!....நம் கன்யா!”

ஆதங்கமும் ஆதுரமுமாக உரைத்தார் அரசர்.

வியப்பின் அதிர்ச்சியுடன் அப்படியே பேசச் சக்தியற்று சிறுபொழுது இருந்தார் அழகண்ணல். “தாங்கள் கவலைப்படலாகாது. எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்கிறேன். இளவரசியை அவ்வளவு குறைத்து எடைபோட்டுவிடக் கூடாது மன்னர்பிரான்!. அவர்கள் விவேகமானவர்கள்!. படையெடுப்பைப் பற்றிய நாள் விவரங்களை நாம் வெகு அந்தரங்கமாகக் காக்க வேண்டும்!...” என்று கூறித் தயங்கினார்.

“நாதசுரபி என் பணிப்பெண்! தாங்கள் அறிவீர்கள்!...”

“நான் பொதுவாகச் சொன்னேன். மன்னர் பிரான் பொறுத்தருள வேண்டும்!...”

அப்போது, யாரோ கிழவன் ஒருவன் வந்தான். தாடியும் மீசையுமாக பழுத்த பழம்போலவே காணப்பட்டான். “எனக்குக் கங்காபுரி தேசம். வடக்கே... மூன்று நாள் நடக்க வேண்டும்... வித்தை காட்டிப் பிழைப்பவன்!...” என்று சொன்னான், வெளி வாசற்படியில் நின்றபடி.