பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

இளவரசி வாழ்க


“ஆமாம், தந்தையே!...நான் மிகமிகப் பாக்கியம் செய்தவள்!.. என் மனம் ஆனந்தக் கடலாடுகிறது, தந்தையே!.. எங்கள் காதலுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்ட உங்கள் அன்பும் கருணையும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்! நான் கொடுத்து வைத்தவள்! அகவேதான், என் மனம் கவர்ந்த காதலராம் வேழ நாட்டரசரை நான் எடுத்துக் கொள்ளவும் என்னால் முடிந்தது!..."

அருமைத் தந்தைக்குக் கரங்கூப்பி நன்றி தெரிவித்தாள் இளவரசி கன்யாகுமரி!

அந்திப் பூந்தென்றல் ஆனந்தம் பொங்கிட விளையாடியது.

வெற்றி முரசுகள் வீர முழக்கம் செய்தன!

மக்கள் வெள்ளம் அணைகடந்தது.

“சிருங்காரபுரி நாட்டின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உகந்த மாட்சிமை தங்கிய மாமன்னர் பூபேந்திர பூபதி அவர்கள் வாழ்க பல்லூழி!...”

“சிருங்காரபுரியின் மாண்புநிறை இளவரசி கன்யாகுமரி வாழ்க பல்லாண்டு!”

"வேழிநாட்டு வேந்தர் மேன்மைமிக்க விஜயேந்திரன் வாழிய, வாழியவே!...”

மங்கள நல்வாழ்த்துகள், மங்களகரமாகவே திக்கெட்டும் ஒலித்தன; எதிரொலித்தன!...

அதோ, சிருங்காரபுரி நாட்டின் விலைமதிப்பில்லாச் செல்வம், குழந்தைத் தெய்வமாக – தெய்வக் குழந்தையாகச் சிரித்துக் கொண்டே இருக்கிறது!

(முற்றும்)