பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அந்த நாய்க்குட்டி எங்கே?



“என் பெயர் பூபாலன்! ஐயா நான் எப்படி இங்கே வந்தேன்? நான் இப்போதே வெளியேற வேணும். என்னுடைய அருமை நாய்க் குட்டியைத் தேடிப்பிடிக்க வேணும். எனக்காக என் அப்பாவும் அம்மாவும் வேறே கவலைப்பட்டுக் கொண்டிருப்பாங்க.”

‘தம்பி, நீ தெருவில் மயக்கம் போட்டுக் கிடந்தாய். காரில் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தேன். அது சரி தம்பி, உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேணும். உன்னைப் போல ஒரு கெட்டிக்காரப் பையன் என்னுடைய சர்க்கஸ் கம்பெனிக்கு வேண்டும். உனக்கு வேண்டிய சகல வசதியையும் நான் ஏற்பாடு செய்கிறேன். உன் பெற்றோருக்கும் இப்போதே தகவல் சொல்லியனுப்பி விடுகிறேன். நீ என்னுடனேயே தங்கிவிடு. உனக்கு எல்லா வித்தைகளையும் கற்றுத் தருகிறேன். உன் படிப்புக்கும் ஏற்பாடு செய்கிறேன். உனக்கு இங்கே ஒரு தோழியும் இருக்கிறாள். அல்லி என்று பெயர். அவள் என்னுடைய ஒரே பெண். ம், சரி என்று சொல்...!”

பூபாலன் என்ன சொல்லப் போகிறனோ என்னவோ என்று சர்க்கஸ் முதலாளி அவன் முகத்தையே உற்று நோக்கியவாறு நின்றான்.

“ஐயா, என்பேரில் நீங்க கொண்டிருக்கிற அன்புக்கும் பாசத்துக்கும் ரொம்ப நன்றி. உங்களுக்கு நான் கடமைப்பட்டவன். எனக்குக்கூட சினிமாவிலே, சர்க்கஸிலே பங்கெடுத்துக் கொள்ளணும்னுதான் ரொம்ப ஆசை. பள்ளிப் படிப்பு மட்டும் எனக்குச் சோறு போட முடியாது. அத்தோடு தொழிற்கல்வியும் அவசியம் தேவைன்னு நம்ம ராஜாஜி அவர்கள் சொல்லியிருப்பதைப் பற்றி வாத்தியார் அடிக்கடி எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆனால் இப்போ என்னாலே இங்கே, ஏன் எங்கேயும் ஒரு நிமிஷங்கூட தங்கவே முடியாது. என்னுடைய உயிருக்குயிரான நாய்க்குட்டியைக் கண்டுபிடித்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அது இல்லாமல் எனக்குப்பைத்தியம் பிடிச்சிடும் போல