பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

13


இருக்குது. அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக்கிட்டு ஸ்டுடியோவுக்கு போகிறதாக இருந்தேன். புறப்படப் போறபோது நாய்க் குட்டியைத் தேடினேன்; காணவில்லை. அதை கார்ப்பரேஷன் நாய் வண்டியிலே துக்கிப் போட்டுப் போயிட்டதாக என் அம்மா சொன்னாங்க... ஐயா. நான் போயிட்டுவர்றேன்″என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான் பூபாலன்.

அவனது கையைப் பற்றியவாறு, “தம்பி, அவசரப்படுகிறாயே? நில், நான் உனக்கு அந்த நாய்க் குட்டியைத் தருகிறேன். சரிதானே? அப்புறம் இங்கேயே தங்கி விடுவாய் அல்லவா?”என்றார் சுகுமார் புன்சிரிப்புடன்.