பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

29



“ஆகட்டும் பூங்கோதை.ஆனா, என் அருமை நாய்க்குட்டி?” என்று விம்மினான் பூபாலன்.

“கடவுள் கட்டாயம் அதைக் காப்பாற்றுவார்“ என்று ஆறுதல் சொன்னாள் பூங்கோதை,

பூபாலன் வானத்தில் பறந்தான்.

அப்பொழுது அவன் கண்ணில் பட்டது ஒரு செய்தித்தாள். மறு வினாடி, அவன், “ஐயோ!’ என்று அலறியவாறு மூர்ச்சித்துக் கீழே விழுந்தான்.

செய்தி ‘...சுகுமார் சர்க்கஸ் கம்பெனியில் பார் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பூபாலன் எப்படியோ தப்பிவிட்டதை அறிந்து, சுகுமார் அவனைத் துப்பாக்கியால் சுட்டான். பூபாலன் தப்பித்து விட்டான். ஆனால் பாவம், அவனுடைய நாய்க்குட்டி துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி விட்டது!”

8

பூபாலன் நன்றாகச் சிரித்து நாட்கள் பன்னிரண்டு ஆகி விட்டன.

பூங்கோதையும் வாய்விட்டுச் சிரித்துப் பன்னிரண்டு நாட்கள் ஆகிவிட்டன.

“பூபாலன் அண்ணாச்சி! எதையோ பறிகொடுத்தாற் போல சதா உட்கார்ந்துகிட்டு இருந்தா என்ன தான் ஆகப்போகிறது...?”

“தங்கச்சி, தன் அருமை நாய்க்குட்டியைப் பறிகொடுத்தவன் பின்னே எப்படி இருக்க முடியும்...? என் நாய்க்குட்டி காணாமப் போச்சு; அப்பவே என் நிம்மதியும் காணாமப் போயிட்டுது. இப்போ என்னுடைய நாய்க்குட்டி செத்துப் போயிட்டதாக பத்திரிகையிலே வேறே தாக்கல் வந்திடுச்சு. பூங்கோதை, நீ மட்டும் இல்லையானா