பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

35


சர்க்கஸ்காரர் சுகுமாரனுடையதாம் இந்தச் சங்கிலி! அதோடு, நீ அவரைக் கத்தியால் குத்த யத்தனித்த குற்றம் வேறே! ம்... புறப்படு தம்பி, அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு..!”

சட்டம் சிரித்தது; சிரித்துக் கொண்டேயிருந்தது!

9

றந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் என்றுமில்லாத கூட்டம். அடுத்த கட்டடத்திலுள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் ஜனங்கள் கூடி நின்றனர்.

பெரியவர் ஒருவர் சொன்னார் “பாவம், பூபாலன் நல்ல பையனாச்சே! பிறந்த மண்ணிலேயே பூவை மாநகரிலேயே முருகேசன் தங்க நினைச்சிருந்தான். போதாத காலம், அப்பன் மனசை ஒடியச் செய்ய, மகனுக்கு - அறியாத பிள்ளைக்கு இப்படி ஜெயிலும் விலங்கும் வந்து விடிஞ்சிருக்குது. படம் பிடிக்க பட்டணத்துக்காரங்க வந்த அதிசயத்தையே நம்ப நாடு நகரம் கதை கதையாய் பேசுது! அதுக்குள்ளே சட்டத்தின் அதிசயமான இந்தக் கதையையும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அந்த சர்க்கஸ்காரனோட வைரச் சங்கிலியை இந்தச் சின்னப் பிள்ளை திருடிடுச்சாம். அதுக்காக அவனுக்குத் திருட்டுப் பட்டம் கட்டின கையோடு விலங்கையும் கைக்கு மாட்டிப்பிட்டானே பாவி..! பட்டணத்துப் போக்கிரின்னா சரியாய்த்தான் இருக்கிறான்...! ம். ஆண்டவன் விட்டவழி! அரசாங்கத்தின் நியாயம் எப்படி இருக்கப்போகுதோ..? ஹும்...! படைச்சவனின் நீதி எப்படித் தீர்ப்புச் சொல்லப் போகுதோ..? வரவர உலகம் உருப்படாமல் போகுது. இல்லையானா, இந்தப் புயல் அடிச்சு ஊர் உலகத்தை இப்படி திமிலோகப் படுத்தியிருக்குமா?”

காலை மணி பதினொன்று.