பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அந்த நாய்க்குட்டி எங்கே?


டேன். குறி தவறிய கத்தி சிறிது தூரம் தள்ளி விழுந்தது. எதிரே பார்த்தேன். இந்தச் சர்க்கஸ்காரர் என் முன் நின்றார். என் மீது அவருக்கு இருந்த பல நாள் கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளத்தான் இச்சதி செய்திருக்கிறார் என்று தோன்றியது. உடனே அவர் என் மீது குறி வைத்து வீசிய அதே கத்தியை பதிலுக்கு நான் குறி வைத்து அவரை நோக்கி வீசினேன். அடுத்த நிமிஷம் போலீஸ்காரர்கள் என்னைக் கைது செய்தார்கள். இந்த வைரச் சங்கிலியைப் பற்றிய விவரம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் நிரபராதி. ககுமார் சொல்வது பொய். அவருடைய வைரச் சங்கிலியை நான் வேலை பார்த்தபோதே திருடி வந்து விட்டதாகப் பழி சுமத்துவது அபாண்டப் பொய். நான் நிரபராதி. கடவுள் சாட்சியாக நான் சொன்னது பூராவும் உண்மை...!”

மாஜிஸ்திரேட் சைகை காட்டினார். எஸ்.ஐ. எழுந்து சென்றார். கத்தியும் வைரச் சங்கிலியும் இப்பொழுது அவரது மேஜையில் கிடந்தன. மாஜிஸ்திரேட் அவை இரண்டையும் புரட்டிப் பார்த்தார் ‘சுகுமார்’ என்ற அழகான எழுத்துக்கள் அவை இரண்டிலும் மின்னின. அடுத்த மூன்றாம் நாள் தீர்ப்புச் சொல்லப்படுமென்று அறிவிக்கப்பட்டது.

மூன்றாம் நாள்...!

கூடியிருந்த அனைவரின் பார்வையும் ஒரு முகமாக மாஜிஸ்திரேட்டையே நோக்கியிருந்தது. அப்பகுதிக்கு அவர்தானே நீதியின் காவலர்!

பூபாலன் பழைய கைதிக் கோலத்துடன் கிளிக் கூண்டில் நின்றான். டைரக்டர், பூங்கோதை, பூபாலனின் தகப்பன் முருகேசன் முதலியோர் தெய்வத்தின்மீது பாரத்தைப் போட்ட வண்ணம் நின்றார்கள்.

இந்தத் துயரக் காட்சிகளைக் கண்டு அந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு மனிதரால் தான் சிரிக்க முடிந்தது. ஆம். அவர்தான் சர்க்கஸ் கம்பெனிச் சொந்தக்காரரான சுகுமார்!