பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

39


நீதி பேசியது: “சிறுவன் பூபாலனை விடுதலை செய்கிறேன். தன் மீது குறி வைத்து வீசப்பட்ட சுகுமாரனின் கத்தியைக் கொண்டுதான் எதிரியைத் தாக்கியிருக்கிறான் சிறுவன். எதிரியின் பெயர் கத்தியிலிருப்பதே இதற்குச் சாட்சியம். அடுத்ததாக, இந்தப் பையன் களவாடி விட்டதாகச் சொல்லப்படும் இந்த வைரச் சங்கிலி சர்க்கஸ் சுகுமாரனுடையதென்று இவரே சொல்கிறார். அதற்கு அத்தாட்சியாக இவர் பெயரே இதிலும் பொறிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் பாவம், இந்த வைரச் சங்கிலி போலி நகை...! இதில் வைரமும் இல்லை; தங்கமும் இல்லை. யானை தன் தலையில் மண்ணைக் கொட்டிக் கொண்டு விட்டது. பொய்யாக கேஸ் கொடுத்த இந்தச் சுகுமார் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப்பட வேண்டும். பாவம், இவரையும் மன்னிக்கிறேன். இனியும் இந்த சுகுமாரன் திருந்தவில்லையென்றால், மறுபடியும் கம்பி எண்ணாமல் இவர் தப்பவே முடியாது சிறுவன் பூபாலனை இப்போதே விடுதலை செய்கிறேன்!”

அடுத்த மின்வெட்டும் இடைவேளையிலே மற்றுமொரு எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.

அவசரத் தந்தியொன்று வந்தது.

மாஜிஸ்திரேட் உத்தரவு போட்டார் : “எஸ்.ஐ! அந்தச் சர்க்கஸ்காரர். சுகுமாரை உடனே கைது செய்யுங்கள்!”


1O

பூவைமாநகரில் எங்கு பார்த்தாலும் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதற்குரிய காரணங்கள் - அவ்வூர் ஆரம்பப்பள்ளி, உயர் தர ஆரம்பப் பள்ளியாக அன்று தான் உயர்த்தப்பட்டது. அந்தக் கிராமத்தில் அன்றைக்குத்தான் புதியதாக தபாலாபீஸ் திறக்கப்பட்டது. பிறகு, சந்தோஷத்துக்குக் கேட்க வேண்டுமா, என்ன?