பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அந்த நாய்க்குட்டி எங்கே?


பான்மையை மறந்து, ஒற்றுமையாகி, பூவைமாநகர் என்ற பேரிலே கூட்டுக்குரல் எதிரொலிக்கும் நாள்தான் இந்த ஊருக்கு விடிவு நாளாகும்!” என்று உணர்ச்சிப் பெருக்கோடு எடுத்துச் சொன்னான் பூபாலன்.

அப்பொழுது–

அவன் அருகாமையில் ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டே வந்து நின்றது.

ஒரு கணம் தொடுத்த கண் வாங்காமல் அந்த நாயைப் பார்த்துக் கொண்டிருந்தான் பூபாலன். ‘குபுக்’கென்று கண்கள் கலங்கிவிட்டன. அந்த ஒரு நாள் – கப்பலோட்டிய தமிழனுக்குச் சிரம் வணங்கிக் கரம் கூப்பி அஞ்சலி செய்து திரும்புகையில், கார் விபத்துக்கு ஆளாகி உயிர் துறந்த தாய் நாய் விட்டுச் சென்ற அந்த நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவத்தை அவன் எப்படி மறப்பான்...? வீட்டுக்கு வந்ததும் அந்த நாய்க்குட்டிக்கு உண்டான எதிர்ப்புகளைச் சமாளித்து அதைத் தன்னோடு வைத்துக் கொண்டு வளர்க்கத் திட்டமிட்ட போது, அது காணாமற் போன நிகழ்ச்சியைத்தான் அவனால் மறக்க முடியுமா? இல்லை. காணாமற் போன அவனுடைய அருமை நாய்க்குட்டியை சினிமா ஸ்டுடியோவில் கண்ட கண்கொள்ளக் காட்சியைத் தான் அவன் மறப்பானா, கடைசியில், சர்க்கஸ்காரன் சுகுமாரின் கம்பெனியில் ‘பார்’ விளையாடினான் அல்லவா? அப்போது, முன்கூட்டியே முடிவெடுத்த திட்டத்தின் படி அவன் அந்த நாய்க் குட்டியுடன் தப்பி வாசலுக்கு வெளியே நின்ற பூங்கோதையின் காரில் குதிக்க எத்தனம் செய்த போது, சர்க்கஸ்காரன் குறி வைத்துச் சுட்டதை நீங்களே நினைவு வைத்துக் கொண்டிருப்பீர்களே? அப்பொழுது அவன் மட்டுமே தப்பினான். நாய்க்குட்டி சர்க்கஸ் கூடாரத்தில் அகப்பட்டுவிட்டதாக எண்ணியிருந்தான்..! ஆனால், பாவம்.