பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மாஸ்டர் உமைபாலன்


செய்யத்தான் ஆசை. ஆனா, ஆண்டவன் என்னைச் சோதிக்கத் தொடங்கியிருக்கிற நேரம் கெட்ட நேரமம்மா இது!... .நான் என்ன செஞ்சிட்டேன்!....ம்!...”

“நீ ரொம்ப ரொம்ப நல்ல அண்ணன்!..."

“ம்... உனக்காச்சும் நான் நல்லவனாத் தோணுறேனே, அது போதும்!” அவன் கண் இமைகள் நனைந்தன. அவன் கேட்டான். “தங்கச்சி, உம் பேர் என்ன?”

அச்சிறுமி சொன்னாள் : “பூவழகி”

உமைபாலனின் வயிறு கெஞ்சியது; சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது. எதிர்ப்புறம் இருந்த ஓட்டலும் அதன் முகப்பு வாசலில் கூடியிருந்த பிச்சைக்காரக் கும்பலும் அவனுள் ஒரு தத்துவமாகத் தெரிந்தது. அந்த ஒரு தத்துவமே வாழ்க்கையாகவும் அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. ‘ஊம்’ என்று மீண்டும் பெருமூச்செறிந்தான் !

பாவம், பொழுது விடிந்ததிலிருந்து அவன் எவ்வளவு பாடுபட்டுவிட்டான்!

“ஏ, தம்பி!”

அழைப்புக் குரல் கேட்டுத் திரும்பினான். ஒளிவிளக்கின் பாதத்தில் இரட்டை நாடி ஆசாமி ஒருவர் காலடியில் சாய்த்து வைத்திருந்த பெட்டியுடன் நின்றார். ‘இதை பஸ் ஸ்டாண்டுக்குக் கொண்டு வா; இருபத்தஞ்சு காசு கூலி தர்றேன்!”என்றார்.

‘சரி’ என்று பையன் பெட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு நடந்தான். விழிமூடி விழி திறப்பதற்குள் அவன் கடமை நிறைவேறி விட்டது.

பெரிய மனிதர் சொன்ன சொல்படி காசுகளை நீட்டினார்.