பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

59


3

புதன்கிழமை!

அன்றுதான் அந்த ஒட்டலுக்கு விடுமுறை நாள்.

உமைபாலன் வழக்கம்போலவே சூரிய உதயத்துக்கு முன்பாகவே படுக்கையை விட்டு எழுந்துவிட்டான். படுக்கை என்றால் என்ன தெரியுமா? உடைந்த செங்கல்தான் தலையணை. கிழிசல் துணிதான் பாய். படுக்கையை ஒரு புறமாக மறைத்துவிட்டுப் பல் துலக்கிவிட்டு வந்தான். மலரும் கதிரவனைக் கண்டதும் மலர்ந்தது அவன் உள்ளம். கைகூப்பி அஞ்சலி செய்துவிட்டு வந்தான்... பசியின் உணர்வு எழுந்தது. அரை நிமிஷம் அவன் எதையோ நினைத்துக் கொண்டவனாக - எதற்கோ ஏங்குபவன் போலத் தோன்றினான். ஆனால் மறுவினாடியே, எதையும் நினைக்காதவன் போலவும் எதற்குமே ஏங்காதவன் மாதிரியும் மாறினான்.

‘பிஞ்சு மனத்தில் விதைக்கப்படும் தன்னம்பிக்கை, பக்தி, அறிவு, அன்பு போன்ற குண நலன்கள் நாளடைவில் பண்பட்டு வந்தால், அவை ஒவ்வொன்றுமே பிற்காலத்தில் அவனுக்குப் பக்கபலமாக அமையவல்லது!’– நேருஜி அடிக்கடி சொல்லி வந்த இவ்வாசகத்தை அவன் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டான். அவனையும் அறியாமல், அவனுக்குத் தெம்பு ஊறியது; தன்னம்பிக்கையும் ஊறியது. ஏதோ ஓர் இலட்சியத்தைத் தன் சித்தத்தில் ஏற்றியவனாக, அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

அவனுடைய தோழர்கள் இன்னமும் கும்பகர்ண சேவையில் லயித்திருந்தார்கள்.

உமையாலன் அவர்களை எழுப்பினான்.

அவர்களுக்கு எப்படிக் கோபம் வந்து விட்டது!

அந்தப் பையன் ஜெயராஜ் மட்டும் முகத்தைச் சுளித்துக் கொண்டே எழுந்தான். மூக்கின் நுனியில் கோபம் இருந்தாலும்,