பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

63


தலைப்பில் செய்யப்பட்டிருந்த விளம்பர வரிகளைப் படித்தான். அவனுடைய கண்கள் ஏன் இப்படிக் கலங்குகின்றன?...அவன் ஏன் அப்படிப் பெருமூச்சு விடவேண்டும்?....

கண்களைத் துடைத்தபடி, மனத்திற்குள் ‘ஒன்று... இரண்டு...’ என்று சொல்லி நாட்களைக் கணக்கிட்டான். காலடி அரவம். கேட்டது. சடக்கென்று பத்திரிகைத்தாளைக் குறுக்கு வசமாக மடித்தான். விளம்பரத்தில் ‘காணவில்லை’ பகுதியில் இருந்த அந்தப் படத்தில் பென்சிலால் ஏதோ கிறுக்கினான். அவசரமாக அதை மடித்து வைத்தான். “பாலா!” என்று கூப்பிட்டு அவன் தோளைப் பற்றினான் ஜெயராஜ். .

வெள்ளைப் பிள்ளையார் கோயிலைக் கடக்கும் வரை ஜெயராஜ், உமைபாலன் இருவரும் மெள்ள நடந்தனர். அப்போது நேருஜியின் உடல் நலம் கெட்டது பற்றி யாரோ பேசிக்கொண்டு போனது உமைபாலனின் செவிகளில் விழுந்தது. அதல பாதாளத்தில் விழுந்துவிட்டதைப் போல் அவன் பதைப்புற்றான்.

அதற்குள், “பாலா, உன்னைப் பற்றிச் சொல்லேன்! ” என்றான் ஜெயராஜ்.

கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல், உமைபாலன் சொன்னான்: “நான் அனாதை. ராமநாதபுரச்சீமைப் பக்கம் எனக்கு. உழைச்சால்தான் வயிற்றுக்கு வழிபிறக்கும்!... ”அவன் இப்போது ஜெயராஜை நோக்கி “உன்னைப்பற்றியும் நான் தெரிந்து கொள்ள வேணாமா?” என்றான்.

“தாராளமாக!” என்று தொடங்கினான் ஜெயராஜ், “எனக்கு மெட்ராஸ் ஊர்.என் தகப்பனார் பெரிய வியாபாரி. பெரிய பங்களா, கார் எல்லாம் உண்டு. ஒருநாள் கோபித்துக்கொண்டார் என் அப்பா. அதைப் பொறுக்காது ஓடி வந்துவிட்டேன். பத்திரிகையிலே விளம்பரம் கூட போட்டுவிட்டார். எனக்கு சுயகவுரவம்தான் ஒசத்தி”

ஒரு சந்து வந்தது.

ஜெயராஜ் தன் நண்பனை நிறுத்தி, அவன் கால்சட்டையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அவனிடம் நீட்டினான் “டே ! பிடிடா”