பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

மாஸ்டர் உமைபாலன்உமைபாலன் மறுத்தான். என்ன சொல்லி மன்றாடியும் மறுதளித்தான்.

ஆகவே, ஜெயராஜ் வெகு குதூகலத்தோடு சிகரெட் பிடித்தான். “எங்க வீட்டிலே – ஊஹும், பங்களாவிலே சிகரெட் எடுத்துக் குடுக்கிறதுக்குன்னே ஒரு பையன் உண்டு!” என்றான்.

“சிகரெட்டை உனக்கு எடுத்துக் கொடுக்கவா?...”

“நீ சுத்த கண்ட்ரியாக இருக்கியே? நான் அவ்வளவு தைரியமாக அங்கே பிடிக்க முடியுமாடா?”