பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

மாஸ்டர் உமைபாலன்



“மகனே!..கருணாகரா.!..”

உமைபாலன் சீற்றத்துடன் தலையை உயர்த்தினான். “யார் உமது மகன்?” என்று ஆங்காரமாகக் கேட்டான்.

“நீ!....நீதான் என் மகன்!...” என்று நெஞ்சு வெடிக்க விம்மினார் காரைக்கால் மனிதர்!

“நானாவது உம் மகனாவது.உமக்குப் பைத்தியமா ஐயா?” சிரித்தான் சிறுவன்!

என்ன அதிசயம் இது!.

சுற்றி நின்றவர்கள் மூக்கில் விரலை வைத்தனர்; குழப்பம். அடைந்தனர்.

சிறுவர்கள் ஜெயராஜ், அப்துல்லா, காளி முதலியவர்கள் உமைபாலனையே இமை வலிக்கப்பார்த்தார்கள்.“உங்க அப்பாகூட இப்படி ஒரு நாள் வந்து உன்னை அழைச்கக்கிட்டுப் பறந்திடுவார்! நீ கொடுத்து வச்சவனப்பா!” என்று ஏக்கப் பெருமூச்சுடன் செப்ப, “நீ போடா!... என் கதையே தனியடா!... நான் ராஜா! டே, அப்துல்லா. இப்ப நடக்கிற நாடகத்திலே கட்டாயம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கணும்டா!” என்று பேச்சுக்குப் பேச்சு ஆளை அறிந்து ‘டா’ போட்டு, அந்த வெற்றியிலேயே கர்வம் கொண்டு நின்றான் ஜெயராஜ்.

அப்போது, வாசலில் யாரோ சிலர் சாப்பாட்டு டிக்கட் கேட்பதறிந்து விரைந்து, மேஜை மீதிருந்த டிக்கட்டுகளைக் கிழித்துக் கொடுத்தான். கொடுக்கப்பட்ட சில்லறைகளை எண்ணி வாங் கினான். அவ்ன் யதேச்சையாகத் திரும்பிய பொழுது, ஏன் அவன் முகம் அப்படி வேர்த்துக் கொட்ட வேண்டும்?

கத்தரி வெயிலுக்கென்று இப்படியொரு மகிமையா?

ஜெயராஜ் ரொம்பவும் சுருக்காகவே திரும்பிவிட்டான். நாடகத்தின் முழுவிவரத்தையும் அறிய வேண்டாமா? வந்ததும், டிக்கட்டுக்கள் விற்ற பணத்தை முதலாளியிடம் சமர்ப்பித்தான். அவன் போய்த் திரும்புவதற்குள் எந்த ரகசியமும் இடம்பெற்றுவிட-