பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

மாஸ்டர் உமைபாலன்



ஆனால், கோபு ஏனோ உதடுகளைப் பிதுக்கினான். முதற் பந்தி முந்ததும், எச்சில் இலைகளை எடுக்க மறுத்த ஜெயராஜைப் பற்றி யாரோ சொன்ன விவரத்தை அப்பாவிடம் எடுத்துக் காட்டினான். “ம்...விதின்னு ஒண்னு இருக்கத்தாண்டா இருக்கு!...நம்ம வேலையைக் கவனிப்போம்டா” என்றார், பெரியவர் சின்னக் குரலிலே!

டிக்கட்டுகளின் வரிசை எண்களைச் சரிபார்த்து வந்த பெரியவர் சடக்கென்று திகைப்புற்றார். இடையில் விற்கப்பட்ட டிக்கட்டுகளிலே இரண்டின் எண்கள் அடுத்தடுத்து விடுபட்டிருப்பதைக் கண்டார். உடனே அவருக்கு ஜெயராஜின் ஞாபகம் வந்தது. ‘நாலு டிக்கட்டுக்கு மாத்திரமே பணம் தந்தான். இரண்டைச் சாப்பிட்டுவிட்டான் பயல்’ என்று சிந்தித்தபடி, அந்தப் பையனுக்கு ஆள் அனுப்பினார். லீவு எடுத்துச் சென்றவன் இன்னமும் மீளவில்லை என்று தாக்கல் சொல்லப்பட்டது.

அப்போது ஜெயராஜைத் தேடி, அவனது கழுத்தில் தொங்கிய சிலுவைச் சின்னத்தை அடையாளம் கூறி, யாரோ ஒருவர் வந்தார். தாம் யாரென்று சொல்லாமல், அவர் வேகமாகத் திரும்பிவிட்டார், சைக்கிளிலே!

ஒன்பதரை மணி.

காரைக்கால் செங்காளியப்பன் கையில் ஒரு துணி முடிச்சுடன் உள்ளே பிரவேசம் செய்தார். பெரிய“செவர்லே” கார் வாசலில் நின்றது. வந்தவர் குந்தினார். பட்டு ஜிப்பா பளபளத்தது.

“பையனை எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்னா!... ஒன்றும் பலிக்கல்லே உம்மைத் தெரியவே தெரியாதுன்னு சாதிக்கிறான்” என்று விளக்கினார் பெரியவர்.

“அப்படியா?...” அதற்கு மேல் காரைக்கால் நபர் பேச முடிய வில்லை. விழிகள் சிவப்பு ஏறின. பிறகு பேசலானார். “என்னோட