பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

7


தைக் கண்டான். அழகானதொரு நாய்க்குட்டி அந்த நாயின் அருகில் கிடந்தது. விழிகளை நிமிர்த்திக் கூட்டத்தை நோட்டம் விட்டான். கார் டிரைவர், நாயின் உயிரைக் கொன்றதுமின்றி, அதன் வழி உயிரையும் தட்டிக் கொண்டு போக எண்ணுவதை ஊகித்தது பிஞ்சு நெஞ்சம். அவ்வளவுதான், பூபாலன் அந்த நாய்க் குட்டியைக் எடுத்துத் தன் பையில் திணித்துக் கொண்டு பிடித்துவிட்டான் ஒட்டம்!

2

“அம்மா. அம்மா’’ என்று அலறிக் கொண்டு ஓடி வந்தான் பூபாலன். ரேழியில் இருந்த தண்ணீரை மொண்டு ‘மடக் மடக்’ கென்று குடித்தான் மூச்சுக்கு அணைகட்ட முடியவில்லை.

அஞ்சலை என்னவோ ஏதோ என்று பதறிப்போனாள்.

“அம்மா, நான் போனவருஷம் பள்ளிக்கூடத்திலே தங்கப் பதக்கம் ப்ரைஸ் வாங்கினேனே, நினைவிருக்குதா?”

“ஆமாடா, தம்பி. வாயில்லாப் பிராணிகளிடம் அன்பு காட்டனும்னு நீ பிரசங்கம் செய்ததுக்கு பதக்கம் தந்தாங்க சர்க்காரிலே என்ன சேதி...?”

“சொன்னபடி நடக்கணும்னுதானே பெரியவங்க அடிக்கடி சொல்லுறாங்க...?”

“என்னென்னமோ கேட்கிறியேடா’கண்ணு! வேளா வேளைக்குச் சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு திட்டம் போடவே எனக்குப் பொழுது காணலே. சரி. சேதியைச் சொல்லு”

பூபாலன் பதில் எதுவும் சொல்லவில்லை. புத்தகப் பையைக் கீழே வைத்தான். ‘வாள்-வாள்’ என்று ஒரு கூக்குரல் எழுந்தது. உடனே அந்த நாய்க்குட்டி தரைக்குப் பாய்ந்து விட்டது. பிறகு அது பூபாலனைப் பார்த்தது.