பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எல்.ஆறுமுகம்

89


ஆசைகளை மட்டும் பெருக்கிக்கிட்டு, பணக்காரப் பிள்ளையாய் நடிச்சான்! இரண்டுக்கும் எத்தனை எத்தனையோ வித்தியாசம் இல்லையா?... தம்பி! நீ ஊருக்குப் போயி உங்க அப்பா அம்மா இஷ்டப்படி அங்கேயே தங்கி நல்லாப் படி. அப்புறம் இன்னும் தெளிவாயும் சுலபமாயும் இந்த லோகத்தைக் கத்துக்கலாமே! பின்னே நீ இஷ்டப்பட்டாலும் இங்கே வரலாம். இது உன் சொந்த ஓட்டல்!..”

கனபாடி ஐயர் சிரித்தபடி நிறுத்தினார். சிறுவன் உமைபாலனை ஆசீர்வாதம் செய்தார். புறப்பட வழியனுப்பினார். அவன் சம்பளம், அவன் சட்டைப்பையில் இருந்தது.

நகைகள் பளிச்சிட ஜம்மென்று புறப்பட்டான் உமைபாலன். பிச்சைக்காரத் தங்கை பூவழகியும் அவனுடன் புறப்பட்டாள்!

அந்த ஒட்டல் தொழிலாளத் தோழர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி வழியனுப்பினார்கள்.

″உமைபாலனுக்கு ஜே” என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன. -

முத்துப் பல்லக்கு மாதிரி ஆடி அசைந்து புறப்பட்டது அந்த நீலநிற கார்.

உமைபாலனின் அழகான விழிகளிலிருந்து கண்ணீரின் துளிகள் வழிந்துகொண்டே இருந்தன.

அவனது பிஞ்சுக் கரங்கள் குவித்தது குவித்தபடியே இருந்தன.

மீண்டும் “ஜே!" முழக்கங்கள் புறப்பட்டன!