பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இளவரசி வாழ்க


பதித்து வந்திருக்கிறான் அவன். பாம்பின் கால் பாம்புக்குத்தான் தெரியுமோ?

“நீ யார்?”

“நானா, பெண்!... குமரி!....”

“ஊர்?”

“மணிபல்லவம்?”

“உண்மையாகவா?”

“ஆம்; புத்தர் வழிபாடு எங்களுக்குச் சொந்தம். பொய் பேசோம்!...”

“இங்கே ஏன் வந்தீர்கள்?”

“ஏன், உங்கள் நாட்டிற்கு யாத்ரீகர்கள் யாருமே காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று ஏதாவது தடுப்புச் சட்டம் பிரகடனம் ஆகியுள்ளதா?”

தலைவன் வாயடைத்துப் போனான். “பின், நீ மட்டுந்தானா வந்தாய்?” என்று மீண்டும் வினவினான்.

“ஆம், எனக்கு நான்தான் காவல். வேறு அச்சம் எனக்கு ஏன் இருக்கப் போகிறது?”

“பெரிய பெண்தான் நீ”

“ஊஹம். நான் சின்னப்பெண். குமரிப் பெண்!”

“ம்!”

“ஐயா, ஒரு வேண்டுகோள்!”

“சொல்லலாம்!”

“உங்கள் இளைய ராஜாவை நான் கண்டுகளிக் வேண்டும்!”