பக்கம்:அனிச்ச மலர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அனிச்ச மலர்


கடிதத்தில் இடம் பெற்றிருந்தன. புதிதாக ஒன்றுமில்லை. வழக்கமான உபதேசம்தான்.

ஆனால் அடுத்த வார இறுதியிலேயே சினிமாத் தயாரிப்பாளர் கன்னையா "வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்காக காஷ்மீர் போகலாமா?” என்று சுமதியைக் கேட்டபோது அவளால் மாட்டேன் என்ற சொல்ல முடியவில்லை. மேரிதான் வந்து கூப்பிட்டாள். சுமதிக்கு முழுச் சம்மதம் என்றாலும்,

"காலேஜிலே என்னடி சாக்குச் சொல்லி லீவு கேட்கிறது?" என்று மேரியிடம் பதிலுக்கு வினவினாள் அவள்.

"இங்கே உள்ளூர்லே யாருக்காவது உடம்பு சுகமில்லேன்னு சாக்குப் போக்குச் சொன்னால் பத்து நாள் லீவு வாங்க முடியாது. துணிஞ்சு மதுரையிலே உங்கம்மாவுக்கே உடம்பு செளகரியமில்லேன்னு ஒரு லீவு லெட்டர் எழுதி நீட்டு. வார்டனோ, பிரின்சிபால் அம்மாளோ தட்டிச் சொல்ல முடியாது” என்று மேரியே ஒரு யோசனை சொல்லிக் கொடுத்தாள்.

மேரி சொல்லி கொடுத்தபடியே லீவு லெட்டர் எழுதி லீவும் கொடுத்துவிட்டார்கள். ஆனால் மாலதிசந்திரசேகரன் சுமதியைக் கூப்பிட்டு எச்சரித்தாள்;

"சுமதீ! நீ எப்போ தேடினாலும் ரூமிலேயே இருக்கிறதில்லே. சதா எங்கேயாவது சுத்திக்கிட்டிருக்கே படிப்பிலே நாட்டம் இருக்கிறதாவே தெரியலே. பத்து நாள் லீவு குடுத்திருக்கோம்கிறதுக்காகப் பத்து நாளுமே வராமல் இருக்கணும்னு அவசியம் இல்லே. அம்மாவுக்கு உடம்பு சரியானதும் உடனே புறப்பட்டு வந்துடணும் நீ, வேணும்னா நான்கூட, உங்கம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.”

”நீங்க ஒண்ணும் எழுத வேண்டாம் ! நானே அம்மாவுக்கு உடம்பு சரியானதும் அதிக நாள் தங்காமப் புறப்பட்டு வந்துடறேன்” என்று வார்டனிடம் உறுதி சொன்னாள் சுமதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/106&oldid=1132131" இலிருந்து மீள்விக்கப்பட்டது