பக்கம்:அனிச்ச மலர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

49

 தும் பின் ஸீட்டிலிருந்த சுமதியிடம் எதுவுமே பேச வில்லை. சுமதியும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். மேரி பேசுவதாகக் காணோம். பொறுமை இழந்த சுமதி. "நயன் ஃபார்ட்டி ஃபை வோட ஹாஸ்டல் எண்ட்ரீ கேட் க்ளோஸ் பண்ணிடுவாங்க... நீ முதல்ல என்னை 'டிராப்' பண்ணிட்டு அப்புறம் வேற எங்கே வேணும்னாப் போ மேரி! அதான் நான் அப்பவே ஆட்டோவிலே போறேன்னேன்” என்ற சிறிது கடுமையான குரலிலேயே சீறுவதுபோல் பேசினாள்.

"ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோ. உன்னைப் பத்திரமாகக் கொண்டு போய் 'டிராப்' பண்ணிடறோம்டீ ஹாஸ்டல் வார்டன் அம்மாளே எத்தினியோ நாள் டாக்சி வரவழைச்சு ராத்திரிப் பதினொரு மணிக்குப் புறப்பட்டு எங்கெங்கோ சுத்திட்டு மூணு மணிக்குத் திரும்பி வரா. நீ என்னடான்னா ஹாஸ்டலைப்பத்தி ஒரேயடியா நடுங்கறே?”

"யார் எப்படியிருந்தா நமக்கென்ன மேரி? நாம நம்மளவிலே ஒழுங்கா இருப்போமே. அதில் என்ன தப்பு?”

"ஆகா, தாராளமா ஒழுங்கா இரு. உன்னை யார் வேண்டாம்னாங்க.”

மேரி அப்போது சுமதியை நோக்கிப் பேசிய குரலும் சூடேறித்தான் இருந்தது. பெர்மிட் ஹோல்டர்ஸ் கவுண்டரைத் தேடிப்போனவர் மேலே அழகாக 'விஸ்கி' என்ற அச்சிட்டிருந்த அட்டைப் பெட்டியுடன் திரும்பி வந்து காரைக் கிளப்பிப் புறப்பட்டார்.

சொன்னபடி மேரி முதலில் சுமதியை ஹாஸ்டல் முகப்பில் டிராப் செய்துவிட்டுத்தான் போனாள். மேரியின் சிநேகிதரும் அவளும் காரிலிருந்தபடியே சுமதிக்கு 'குட்நைட்' சொன்னார்கள். அப்போதிருந்த மனக்குழப்பத்தில் அவர்களிடம் பதிலுக்கு 'குட்நைட்' சொல்லக் கூடத் தோன்றாமல் ஹாஸ்டல் எண்ட்ரீ கேட்டை நோக்கிச் சுமதி ஒட்டமும் நடையுமாக விரைந்தாள்.

அ.ம.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/51&oldid=1120749" இலிருந்து மீள்விக்கப்பட்டது