பக்கம்:அனிச்ச மலர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

89

"நிற்கிறீங்களேம்மா. உட்காருங்க” என்று பையன் ஒரு மடக்கு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து பிரித்துப் போட்டான். சுமதி உட்கார்ந்து கொண்டாள்.

அன்று செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் செய்தது போல் அருவருப்படைந்து ஒடுகிற சக்தி இப்போது சுமதியிடமே இல்லை. இந்த அளவிற்குத் தன் உணர்வுகள் பதிந்து போய்விட்டனவே என்ற ரோஷம்கூட இப்போது அவளுக்கு வரவில்லை.

சிறிது நேரத்தில் ஒன்றுமே நடக்காததுபோல் சகஜ மாகப் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்களை எண் னியபடி மேரி அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். சுமதியைக் கண்டதும், "என்னடி நீ இங்கேயா உட்கார்ந்துக்கிட்டிருக்கே: மாடியிலே போய் டான்ஸ் மாஸ்டரைச் சந்திக்கலியா?” என்ற கேட்டபடி ரூபாய் நோட்டுக்களை அப்படியே 'பிளவுஸ்"க்குள் திணித்துக் கொண்டாள் மேரி. -

கையிலிருந்த டம்பப் பையை விட்டு விட்டுப் பிளவுஸ்-க்குள் பணத்தை அவள் திணித்துக்கொண்டது சுமதிக்கு ஒரு வித்தியாசமான பழக்கமாகத் தெரிந்தது.

"டான்ஸ் மாஸ்டரைப் பார்த்துட்டு வந்தாச்சு’ என்றாள் சுமதி. ஒரு நிமிஷம் பொறுத்து, "நாளையிலே யிருந்து டான்ஸ் கிளாஸுக்கு வரச் சொன்னாரு. மாச ஃபீஸ் நூத்தைம்பது ரூபாய்னும் சொன்னாரு” என்றும் சேர்த்துச் சொன்னாள். ' பணத்தைப் பத்திக் கவலைப்படாதே! நான் இருக்கேன். யூ கோ எஹெட்” என்று சொல்லிச் சுமதியின் முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள் மேரி. "கன்னையா துரங் கிட்டாரு. நாளைக் குச் செம்பரம் பாக்கம் ஏரியிலே ஏதோ 'அவுட்டோர் ஷூட்டிங் இருக்காம். அதுக்கு உன்னையும் வரச்சொல்லி எங்கிட்ட முன்பணம் கொடுத்திட்டாரு. அவர் கார்லியே போயி உன்னை ஹாஸ்டல் வாசல்லே 'டிராப் பண்ணிட்டு இப்ப நான் போறேன்” என்று சுமதி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/91&oldid=1146905" இலிருந்து மீள்விக்கப்பட்டது