பக்கம்:அனிச்ச மலர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

95

தன்னை அந்த வெளிப்புறக் காட்சிப் படிப்பிடிப்பிற்கு வரச் சொல்லிவிட்டதற்காக ஏதோ பேருக்கு நடிக்கச் சொல்வதாகச் சுமதிக்குத் தோன்றியதே ஒழிய அது அவ்வளவு முக்கியமானதாகப் படவில்லை. வந்திருந்த யூனிட் முழுவதும் ஏதோ பிக்னிக் புறப்பட்டு வந்தமாதிரி நடந்து கொண்டார்களே ஒழியப் படம் பிடிக்க வந்த மாதிரித் தெரியவில்லை. பணம் பாழாயிற்று. ഖ്ങ്ങ് அரட்டையும் வம்புமாக நேரம் கழிந்து கொண்டிருந்தது.

"இந்தாப்பா!பகல் சாப்பாட்டு மெனுவிலே மொறு மொறுன்னு ஒரு மசால் வடையையும் சேர்த்துக்கோ, மறந்துடாதே’ என்று தயாரிப்பாளர் மிகவும் அக்கறை பாகச் சொன்னார்.

"இந்த அவுட்டோர் உனக்குன்னே ஏற்பாடு பண்ணி னதுடி சுமதி” என்று சுமதியின் காதருகே சொன்னாள் மேரி. -

"தெண்டச் செலவு. முகம் கூடத் தெரிய வழியில் லாத ஒரு டுப் காட்சிக்காக இவ்வளவு செலவழிக் கணுமா மேரி?” என்று சுமதி வெடுக்கென்று கேட்டுவிட்டாள்.

“உன்னைப் போல ஒரு பெண்ணுக்காக நம்ம புரொட்யூஸர் எவ்வளவு வேணும்னாச் செலவழிப்பார் சுமதி

மேரி எதற்காக இப்படிச் சொல்கிறாள் என்று சுமதி யோசிக்கத் தொடங்கினாள். அவள் சொன்ன வாக்கியம் சரியாகச் சுருதி சேரவில்லை. அதில் சுருதி பேதம் இருந்தது. அதற்கேற்றாற் போலத் தயாரிப்பாளரும் குட்டி போட்ட பூனையைப் போலச் சுமதியையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார்.

“சுமதிக்கு எது வேணும்னாலும் கூச்சப்படாம எங்கிட்டக் கேட்கணும். பகல் சாப்பாட்டோட ஏதாச்சும் ஒரு ஸ்வீட்டுக்குச் சொல்லட்டுமா? வேறே ஏதாவது ஜூஸ் கீஸ் வேணுமா?" என்றெல்லாம் அருகே வந்து மிகவும் கனிவாக விசாரித்துக் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/97&oldid=1146912" இலிருந்து மீள்விக்கப்பட்டது